உங்கள் வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத சிக்கல்கள் கஷ்டங்களை கொண்டுப்பவர் ராகு பகவான்! ராகு பகவானிடம் இருந்து தப்பித்துக் கொள்ள தினமும் இப்படி குளித்தாலே போதும்.

rahu ketu astro

நம்முடைய வாழ்க்கையில் தீர்க்கமுடியாத பல கஷ்டங்கள் வருவதற்கு காரணம் நம்முடைய ஜாதக கட்டம் தான். அந்த ஜாதக கட்டத்தில் ராகு பகவான் சரியாக அமையவில்லை என்றால், நம்முடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஒன்றுமில்லை! நம்முடைய வீட்டில் ஆரம்பிக்கும் ஒரு சிறிய சண்டை பெரிய பூதாகரமாக வெடித்து, நம்முடைய குடும்பமே சிதறும் அளவிற்கு கூட கஷ்டங்கள் நம்மை வந்து சூழ்ந்து விடும். இந்த ராகு பகவானிடமிருந்து நாம் தப்பிக்க சுலபமாக ஆன்மீக ரீதியாக என்ன தான் வழி? அதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ragu-rahu-dasa

எல்லோருக்குமே ஜாதகத்தில் நம்பிக்கை என்பது இருப்பது கிடையாது. சிலபேர் ஜாதகத்தை பார்த்து ராகு திசை எப்போது நடக்கின்றது, ராகுவால் எப்போது நமக்குத் தொல்லை என்று தெரிந்து வைத்துக் கொண்டிருப்பார்கள். சிலபேர் அந்த ஜாதகத்தை எல்லாம் பார்க்க மாட்டார்கள். இருப்பினும் அவர்களுக்கும் கஷ்டகாலம் என்பது ஒன்று வந்திருக்கும்.

வாழ்க்கையை எப்போது பார்த்தாலும் சண்டையில் தான் ஓட்ட வேண்டிய சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை, குழந்தைகளுடன் சண்டை, பெற்ற தாய் தந்தையுடன் சண்டை, அலுவலகத்தில் வேலை செய்பவரிடம் சண்டை, நண்பர்களிடம் சண்டை, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சண்டை, இப்படியாக நம்முடைய வாழ்க்கை சண்டையிலேயே சென்று கொண்டிருக்கும். இதனால் மன நிம்மதி சுத்தமாக இருக்காது.

bathing

இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் தினமும் காலையில் குளிக்கின்ற தண்ணீரில் 1 ஸ்பூன் பாலை கலந்து அதன் பின்பு, அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். இப்படி எத்தனை நாட்கள் குளிப்பது? உங்களுக்கு பிரச்சனைகள் நீங்கும் வரை குறைக்கலாம் தவறில்லை.

- Advertisement -

அடுத்தபடியாக நீங்கள் முக்கியமான காரியங்களுக்கு வெளியே செல்லும்போது கருநீல ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். கருநீலத்தில் உங்களிடம் ஆடை இல்லை என்றால் கூட, ஒரு சிறியதாக சதுர வடிவில் கருநீல துணியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதை உங்களது கை குட்டை போலாவது உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். கருநீல பொருள் உங்கள் இடத்தில் இருந்தால், ராகு பகவானின் தாக்கம் குறைவாக இருக்கும்.

உங்களுடைய வீட்டில் செம்பு சம்பந்தப்பட்ட பாத்திரத்தில் நீங்கள் தண்ணீரை குடிக்கலாம். செம்பு மோதிரம் அல்லது காப்பை நீங்கள் கையில் அணிந்து கொள்ளலாம். தினமும் பறவைகளுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது ஒரு தானியத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இது உங்களுடைய வாழ்நாளின் வழக்கமாக வைத்துக் கொண்டால், ராகு பகவானால் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து பாதி அளவு தப்பித்துக்கொள்ளலாம்.

copper-vessel

இவை எல்லாவற்றையும் விட மிக மிக மிக சுலபமான பரிகாரம் எது என்றால், வீட்டின் நிலைப்படியில் மாஇலை தோரணம் கட்டி வைத்தாலும் ராகுவால் வரக்கூடிய பிரச்சினைகள் நம் வீட்டிற்குள் நுழையாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

ராகு பகவானால் பிரச்சனை உள்ளவர்கள், எப்போதும் உங்களுடைய உறவுகளுடன் சேர்ந்து இருப்பதை பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் தனியாக இருந்தால் உங்களுக்கான மனக்குழப்பங்கள் அதிகரித்து, மன பாரம் அதிகரித்து தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளத் தான் செய்வீர்கள்.

indian-family

சண்டை வந்தாலும், உறவுகளை விட்டுக் கொடுக்காமல் உறவுகளோடு கலந்து இருக்க வேண்டும். ராகுவிடம் இருந்து நம்மை காக்கும் முதல் அஸ்திரமே நம்முடைய குடும்பம் தான். ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தில் ராகு எந்த பிரச்சினையையும் கொடுக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.