ஜாதகத்தில் உள்ள ராகு – கேது தோஷத்தை நீங்களே கண்டறிவது எப்படி?

rahu-ketu

நாம் பிறக்கின்ற பொழுதே நேரம், நாள், நட்சத்திரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்படுவதே ஜாதகமாகும். ஜோதிடரிடம் நமது ஜாதகத்தை காட்டி பலன்களை தெரிந்து கொள்வது என்பது அனைவரும் செய்யக் கூடிய ஒன்று தான். சிலருக்கு தங்களின் சொந்த ஜாதகத்தை, தாங்களாகவே ஆராய்ந்து தோஷங்கள், பாதகமான கிரக நிலைகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். குறிப்பாக நவகிரகங்களில் சக்தி வாய்ந்த கிரகங்களாக இருக்கும் ராகு – கேது கிரகங்களின் தோஷம் நமக்கு இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

astro

நமது ஜாதகத்தில் ராகு – கேது தோஷம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பிறந்த நேரம், நாள், கிழமை, நட்சத்திர, கிரகங்களின் நிலை போன்ற அனைத்தும் சரியான முறையில் கணிக்கப்பட்டு பலன் எழுதபட்டதாக நமது ஜாதகம் இருக்க வேண்டும்.

அந்த ஜாதகத்தில் லக்னம் எனப்படுவதை குறிப்பிடும் “ல” என்கிற எழுத்து ஜாதக கட்டங்களில் எங்கேனும் ஒரு கட்டத்தில் எழுதப்பட்டிருக்கும். இந்த லக்னம் தான் ஒருவருக்கு முதல் வீடு. உதாரணமாக ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் மிதுன ராசியில் ல என்கிற எழுத்து எழுதப்பட்டிருக்குமானால், அந்த மிதுன ராசி தான் அந்த ஜாதகரின் லக்னம் மற்றும் முதல் வீடாக அமைகிறது. இந்த மிதுன லக்னத்திற்கு அடுத்த கடகம், சிம்மம், கன்னி என கடிகார சுற்று முறையில் 12 வீடுகளை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.

jathagam astro

அந்த வகையில் ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் லக்னம், 2, 7 , 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது கிரகம் இருக்குமேயானால் அந்த ஜாதகருக்கு ராகு – கேது தோஷம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் மேற்கூறிய 1, 2, 7, 8 ஆம் வீடுகளில் ராகு – கேது கிரகங்கள் இருந்தாலும், அந்த வீடுகள் ராகு – கேது கிரகங்களுக்கு உச்ச வீடாகவோ, அல்லது நட்பு வீடாக இருக்கும் பட்சத்தில் ராகு – கேது தோஷம் இல்லை என்பது தெளிவு. ஆனால் மேற்கூறிய வீடுகள் ராகு – கேது கிரகங்களுக்கு நீச்ச வீடுகளாக இருக்கும் பட்சத்தில் ராகு – கேது தோஷத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் லக்கினம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு – கேது கிரகங்கள் இருந்து, ராகு – கேது தோஷம் ஏற்பட்டிருக்குமானால் இதே போன்று ஜாதக அமைப்பை கொண்ட ஆண் அல்லது பெண் வரனை ராகு – கேது தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதால் ராகு – கேது தோஷ நிவர்த்தி உண்டாகிறது.

rahu 1

ஜாதகத்தில் ராகுவால் மட்டுமே தோஷம் ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளாகும் நபர்கள் வெள்ளிக் கிழமைகள் மற்றும் ராகு திசை, ராகு புக்தி நடைபெறும் காலங்களில், ராகு காலத்தில் விரதம் அனுஷ்டித்து, ராகு பகவானுக்கு மந்தாரை பூக்களால் அர்ச்சனை செய்து, உளுந்து கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் செய்து ராகு காயத்ரி மந்திரங்களை 108 முறை ஜெபித்து வழிபடுவது, ராகு கிரக தோஷ பாதிப்புகளை குறைக்க செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும்.

அதே போன்று ஜாதகத்தில் கேது கிரக தோஷத்தினால் மட்டுமே பாதிப்புகளை எதிர்கொள்வார்கள், திங்கட்கிழமைகள் மற்றும் கேது திசை கேது புக்தி நடைபெறும் காலங்களில், கேது பகவானுக்கு விரதமிருந்து பல வகையான வாசமிக்க மலர்களைக் கொண்டு, கேதுவுக்கு அர்ச்சனை செய்து, ஏதாவது ஒரு வகை சித்ரா அன்னம் நைவேத்தியம் வைத்து, கேது பகவான் காயத்ரி மந்திரங்களை 108 முறை துதித்து வந்தால் கேது கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள், பாதிப்புகள் நீங்கும்.

Astrology ketu

ராகு – கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வருடத்திற்கு ஒருமுறை ஸ்ரீ காளஹஸ்தி கோயிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில், ராகு – கேது தோஷ நிவர்த்தி பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறந்த நன்மைகளை உங்களுக்கு ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு வசதியான வாழ்க்கை ஏற்பட இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rahu kethu dosham in Tamil. It is also called as Rahu kethu graha in Tamil or Rahu ketu valipadu in Tamil or Rahu ketu pariharam in Tamil or Jathagathil rahu ketu dhosham in Tamil.