உங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதை தடுத்து செல்வ சேமிப்பை அதிகரிக்கும் மந்திரம்

rahu

புராணங்களின்படி தேவாமிர்தத்தை உண்டு இறவா வரம் பெற்ற சுவர்ணபானு என்கிற அரக்கன் குறித்து சூரிய – சந்திரன் கிரகங்களால் திருமாலிடம் முறையிடப்பட்டு, அந்தப் பெருமாள் சுவர்ணபானுவை இரண்டு துண்டுகளாக வதம் செய்தார். அந்த உடல் துண்டுகள் இரண்டில் ஒன்று ராகு கிரகமாகவும் மற்றொன்று கேது கிரகமாகவும் உண்டாகியது. சூரிய மற்றும் சந்திர கிரகண காலங்களில் பூமி மற்றும் சந்திரனில் ஏற்படுகின்ற நிழல்களே இந்த ராகு – கேது கிரகங்கள் ஆகும். இதில் ராகு பகவானுக்குரிய ராகு மூல மந்திரம் துதிப்பதால் ஏற்படுகின்ற நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

rahu

ராகு மூல மந்திரம் :

ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே
ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா

ராகு பகவானின் இந்த மூல மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் ராகு பகவானை மனதில் நினைத்தவாறு இந்த மூல மந்திரத்தை 108 முறை 1008 முறை துதிக்க வேண்டும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வருகின்ற ராகு கால நேரத்தில் சிவாலயங்களுக்கு சென்று, நவகிரக சன்னதியில் ராகு பகவானுக்கு சிறிது குதிரை கொள்ளு சமர்ப்பித்து, நெய் தீபங்களேற்றி இந்த மூல மந்திரத்தை துதித்து வந்தால் ஜாதகத்தில் ராகு பகவானால் ஏற்படுகின்ற தோஷ பாதிப்புகள் குறையும். நமது வாழ்வில் குறுக்கிடும் தீய குணங்கள் உள்ள நபர்கள் விலகுவார்கள். எதிரிகளை எப்போதும் வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிந்து மிகுந்த செல்வத்தை ஈட்டக் கூடிய அமைப்பு உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். நீண்ட நாட்களாக கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிது சிறிதாக அந்த வியாதிகளிலிருந்து குணமடைவார்கள். சம்பாதிக்கும் பணம் வீண் விரயமாகி சேமிக்க முடியாமல் இருந்தவர்களுக்கு செல்வ சேமிப்பு அதிகரிக்கும்.

rahu

ராகு பகவான் பரிகாரங்கள்

- Advertisement -

ராகு பகவானின் முழுமையான அருளைப் பெற விரும்புபவர்கள் தஞ்சை மாவட்டத்தின் திருநாகேஸ்வரம் ஊரில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலுக்கு ஏதேனும் ஒரு செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை காலையில் சென்று, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் ராகு பகவானுக்கு, ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் ராகு கிரகத்தின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படுவதை காணலாம்.

rahu 1

மேற்சொன்ன பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குள்ளாக சென்று, கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுப் பதார்த்தத்தை நைவேத்தியம் வைத்து, சிவப்பு நிற மலர்களை சாற்றி, நல்லெண்ணை தீபம் ஏற்றி ராகு பகவானுக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை 1008 முறை வரை துதிப்பதால், ராகு பகவானால் ஏற்படும் பாதகமான பலன்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரம் முதல் அதிகபட்சம் 27 வாரம் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனைப் பெற இயலும்.

Thirunageswaram temple

இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய இயலாதவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் பறவைகளுக்கு உணவும், நீரும் வைத்து வருவதால் ராகு கிரகத்தின் தோஷம் வெகுவாக குறைகிறது. மேலும் உங்கள் சக்திக்கு ஏற்ப அடர் நீல நிற துணிகளை வசதி குறைந்தவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். மறைந்த ஒரு தங்களின் முன்னோர்களுக்குரிய பித்ரு கடன்கள், சிராத்தம் போன்றவற்றை சரியான காலத்தில், முறையாக கொடுத்து வந்தாலே ராகு பகவானால் எத்தகைய தோஷம் ஏற்படாமல் காக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
முருகனை நேரில் தரிசிக்க உதவும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
This article about Rahu moola mantra in Tamil. It is also called as Moola mantras in Tamil or Rahu bhagavan mantra in Tamil or Rahu graha mantra in Tamil or Rahu bhagavan manthiram in Tamil.