உங்கள் ஜாதகத்தில் பிரச்சனையா? ராகுவால் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் விலக சுலபமான பரிகாரம் இதோ.

rahu

இந்த உலகில் பிரபஞ்ச சக்தியை நம்புபவர்களும், அதை நம்பாதவர்கள் என அனைவரும் ஜோதிட கலையில் கூறப்படும் நவகிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு தான் அவர்கள் வாழும் சூழல் ஏற்படுகின்றது. இந்த நவகிரகங்களில் மிகவும் வலிமை வாய்ந்த கிரகங்களாக ராகு மற்றும் கேது கிரகங்கள் கருதப்படுகின்றன. அதிலும் ராகு பகவான் செவ்வாய் கிரகத்தின் அம்சம் கொண்டவராகவும், கேது பகவான் சனி பகவானின் அம்சம் நிறைந்தவராகவும் ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. இதில் ராகு கிரகத்தின் பாதகமான நிலையால் ஒரு மனிதரின் வாழ்வில் ஏற்படக்கூடிய கஷ்டங்களை போக்கி, சுகமான வாழ்க்கை அமைய பண்டைய சாஸ்திரங்களில் கூறப்பட்ட சில சுலபமான பரிகார முறைகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

rahu

நவகிரகம் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களாக கருதப்படுவது நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது கிரகங்கள் ஆகும். பாம்பைப் போன்ற உடலமைப்பு கொண்ட இந்த இரு கிரகங்களின் காரகத்துவம் காரணமாக மனிதர்களுக்கு பலவிதமான வியாதிகள், எதிர்பாரா விபத்துகள், பொருளாதாரத்தில் வீழ்ச்சி, அவமானம், சிறைவாசம் போன்றவை ஏற்பட காரணமாக அமைகின்றது அதிலும் குறிப்பாக ராகு கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் மிகவும் பாதகமான நிலையில் இருந்தால் அந்த ஜாதகர் எதிலும் ஈடுபாடின்மை, மந்த நிலை, விஷ கிருமிகளால் ஏற்படக்கூடிய வியாதிகள், விஷத்தன்மை கொண்ட பொருட்களை உட்கொள்வதால் உடல் உறுப்புகள் பாதிப்பு போன்ற போன்ற பிரச்சனைகளால் அவதியுறும் நிலை உண்டாகும்.

மேற்கூறிய பிரச்சனைகளால் தங்கள் வாழ்வில் அவதியுறுபவர்கள், தங்களின் ஜாதகத்தை அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களிடம் காட்டி ராகு பகவான் காரணமாக அந்த பிரச்சனைகள் ஏற்படுவதை உறுதி செய்துகொண்டு, நவக்கிரகங்களில் ராகு பகவானை சாந்தி செய்வதற்குரிய ராகு பரிகார பூஜை செய்து கொள்வதால் இந்த நோய்கள் தாக்கத்தை குறைக்க முடியும். மேலும் ராகு பகவானின் அருளாசிகளைப் பெற்றுத் தரக்கூடிய சில எளிய பரிகார வழிமுறைகளை அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிப்பதால் ராகு பகவானால் ஏற்படக்கூடிய தீமையான பலன்கள் நீங்கி வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும்.

feeding birds

உணவு என்பது உலகில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதது. ராகு பகவானின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும், ராகு பகவானால் தங்கள் வாழ்வில் கெடுபலன்கள் ஏற்படக்கூடாது என்ற நினைப்பவர்களும் தங்கள் வீடுகளில் தினந்தோறும் எந்த விதமான பறவைகளுக்கும் உணவு அளிக்கும் வழக்கத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பான ஒரு எளிய பரிகாரமாக இருக்கின்றது. ராகு பகவானால் நன்மையான பலன்களை பெற விரும்புபவர்கள் ஆண் மற்றும் பெண் யாராக இருந்தாலும் வெளியில் செல்கின்ற பொழுது தங்கள் தலைகளில் நீலநிற துணி அல்லது தலைப்பாகை அல்லது தொப்பி போன்றவற்றை அணிந்து கொண்டு செல்வது ராகு பகவானின் அருளாசிகளைப் பெற்றுத் தரும்.

Mullangi-keerai

திருமணமான கணவன் – மனைவி தங்களுக்குள் அடிக்கடி சண்டை, கருத்துவேறுபாடு போன்றவைகளால் அவதியுறும் நிலையில் இருப்பவர்கள். தம்பதிகளில் தங்கள் உடன் சண்டையிடும் கணவன் அல்லது மனைவி உறங்குகின்ற சமயத்தில் அவர்களின் தலையணை அருகில் ஐந்து முள்ளங்கி காய்களை வைக்க வேண்டும். முள்ளங்கி காய்கள் எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்துக்கொள்ளும் சக்தி கொண்ட ஒரு காய்வகையாக இருக்கிறது. காலையில் உறங்கி எழுந்ததும் அந்த ஐந்து முள்ளங்கிகளையும் ஓடுகின்ற தண்ணீர் அமைப்பு கொண்ட ஆறு, ஓடை போன்றவற்றில் வீசிவிட வேண்டும். இந்த பரிகாரத்தை ஒரு தேய்பிறை சனிக்கிழமை தினத்தில் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.