KL Rahul : அடுத்தது சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்திய ராகுல் – வீடியோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி நேற்று பெங்களுருவில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதனபடி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களையும், ராகுல் 47 மற்றும் தோனி 40 ரன்களையும் குவித்தனர்.

Toss

பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல்லின் அபார சதம் மூலம் போட்டியினை 19.4 ஓவர்களில் 194 ரன்கள் குவித்து எளிதாக வென்றது. மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 குவித்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் என இரண்டு விருதினையும் தட்டிச்சென்றார். ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த போட்டியில் 47 ரன்களை குவித்த ராகுல் 4 இமாலய சிக்ஸர்களை அடித்தார். அதில் அவர் 6 ஆவது ஓவரில் கம்மின்ஸ் ஓவரில் அடித்த சிக்ஸ் சிரமமின்றி செல்லமாக தட்டினார். ஆனால், பந்து மைதானத்தின் மேற்கூரை உயரம் வரை பறந்தது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டியிலும் சிறப்பாக ஆடிய ராகுல் ஒருநாள் தொடரிலும் ஆட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

- Advertisement -

Rishabh Pant : பண்ட்டின் சவாலுக்கு அவரை போன்றே பதிலளித்த தோனி – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : KL Rahul hitting amazing six

- Advertisement -