முருகா முருகா என்ற வார்த்தையை நீங்கள் மனதார சொல்ல துவங்கி விட்டாலே, உங்களுடைய கஷ்டத்திற்கு அந்த நாள் முதல், அந்த நொடி பொழுதே விடிவுகாலம் பிறந்து விட்டது என்றுதான் அர்த்தம். அதிலும் இந்த முருகப்பெருமான் உங்கள் வீட்டிற்குள் இந்த ரூபத்தில் நுழைந்துவிட்டால் சொல்ல வார்த்தையே இல்லை. உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் வீட்டை விட்டு ஒவ்வொன்றாக வெளியேறு துவங்கும்.
குறிப்பாக உங்கள் பண கஷ்டத்திற்கு ஒரு முடிவு கட்டிவிடலாம். சாதாரண மனித வாழ்க்கை என்னங்க, நீங்கள் அந்த ராஜ வாழ்க்கையை வாழலாம். வீட்டிற்குள் கட்டாயம் இருக்க வேண்டிய முருகர் படம் எது. அந்த படத்தை எந்த திசையை நோக்கி மாட்டி வைக்க வேண்டும், ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
ராஜா அலங்கார முருகர் வழிபாடு
வீட்டில் கட்டாயம் வைக்க வேண்டிய முருகர் படம் ராஜா அலங்காரத்தோடு இருக்கக்கூடிய முருகர் படம். ஒவ்வொரு வீட்டிலும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டிய முருகர் படம் இது. நிறைய பேர் வீடுகளில் பெருமாளை தான் பிரம்மாண்டமாக மாட்டி வைத்திருப்பார்கள் அதில் ஒன்றும் தவறு கிடையாது வைக்கலாம் அதேபோலத்தான். முருகப்பெருமானின் ராஜா அலங்கார படம் பிரம்மாண்டமாக எந்த ஒரு வீட்டில் வரவேற்பறையில் இருக்கிறதோ, அந்த வீட்டில் நிச்சயமாக செல்வ செழிப்புக்கு எந்த ஒரு குறையும் வரவே வராது.
இந்த ராஜா அலங்கார திரு உருவப் படமானது கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும் முருகனின் கண்கள் சூரியன் உதிக்கும் திசையை பார்க்க வேண்டும். அப்போது நீங்கள் இந்த படத்தை மேற்கு பக்கம் இருக்கும் சுவற்றில் மாட்டி வைக்க வேண்டும் அப்போதுதான் தினமும் முருகப்பெருமான் சூரிய உதயத்தை பார்ப்பார். இந்த முருகப்பெருமானுக்கு வெட்டிவேரால் செய்யப்பட்ட மாலையை வாங்கி அணிவிக்க வேண்டும்.
வெட்டிவேர் மாலையை முருகப்பெருமானுக்கு நிரந்தரமாக போட்டு வைத்தால் நம்முடைய வீட்டில் இருக்கும் பணக்கஷ்டமானது உடனடியாக தீரும் என்பது நம்பிக்கை. அது மட்டும் இல்லாமல் தினம் தினம் வாசனை நிறைந்த பூக்களை அந்த முருகருக்கு போடவேண்டும். பூஜை அறையில் பூஜை செய்யும் போது இந்த முருகப்பெருமானுக்கும் தீப தூப ஆராதனைகள் காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் முருகப்பெருமானுக்கு பன்னீர் ரோஜாக்களால் அலங்காரம் செய்தால், செவ்வரளி பூக்களையும் வாங்கி போட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராது. கடன் சுமை இருக்காது. உங்களுடைய வீட்டு பூஜை அறையில் சின்னதாக ராஜ அலங்கார முருகர் இருக்கிறார் என்றால், அந்த முருகருக்கும் நீங்கள் மேல் சொன்ன வழிபாட்டை செய்யலாம். கொஞ்சமாக வெட்டிவேர் வாங்கி வந்து, அந்த திரு உருவப் படத்திற்கு சாத்தலாம்.
இதையும் படிக்கலாமே: சகல துன்பங்களை நீக்கும் உத்பன்ன ஏகாதசி
இருப்பினும் வாய்ப்பு உள்ளவர்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப பிரம்மாண்டமான ஒரு ராஜா அலங்கார முருகரை வாங்கி வைத்துப் பாருங்கள். குடும்ப கஷ்டத்தில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் தெரியும். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையை வாழ இந்த முருகப்பெருமான் நிச்சயம் உங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குவார். இன்று கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமை. இந்த முருகப்பெருமானை பற்றிய சிறப்பான ஆன்மீகம் தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம். அனைத்து முகர் பக்தர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.