ராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்

Pillayar kovil

சேலம் மாவட்டம் மத்தியில் இருக்கும் பெரிய மார்க்கெட் எனும் முதல் அக்ரகாரம் வீதியில் இருக்கும் ஸ்ரீ ராஜகணபதி தான் இந்த பெயருக்கு சொந்தக்காரர். 400 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் காலத்தில் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் ‘’சைலம்’’ என்ற பெயர் பெற்ற தேசம் தான் தற்போதைய சேலம். மிகுந்த சக்தி வாய்ந்த கேட்ட வரம் தரும் கலியுக கண் கண்ட தெய்வாமாக விளங்குபவர் நம் ஸ்ரீ ராஜகணபதி. தினமும் ராஜ அலங்காரத்தில் இருப்பதால் இவர் ராஜகணபதி என்று அழைக்கபடுகிறார்.

pillayar

இவருக்கு அபிசேகம் செய்து வஸ்த்திரம் சாத்தி பிரார்த்தனை செய்தால் வேண்டுதல் நிறைவேறுவதாக ஐதீகம். புதியாக தொழில் தொடுங்குபவர்கள் இவரை தொழில் பார்ட்னராக்கி கொண்டு தொழில் வெற்றி பெற்று ராஜவாழ்க்கை கானுகின்றனர். இந்த பகுதியில் புதியதாக வாகனம் வாங்கும் வாகன ஓட்டிகள் இங்கு பூஜை செய்து வாகன விபத்து வராமல் மேலும் பல வாகனத்திற்கு சொந்த காரர்கள் ஆவது சிறப்பு. இந்த கோவிலில் வழிப்பட்டால் எண்ணிய எண்ணம் அனைத்தையும் நிறை வேற்றுவார் ஸ்ரீ ராஜகணபதி. மற்ற ஆலயங்களில் வினாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மோற்சவம் ஆக கொண்டாடுவார்கள் ஆனால் இங்கு ஜன உற்சவம் ஆக கொண்டாடப்படுகிறது.

ஜன உற்சவம் என்பது பிறந்த நாள் கொண்டு 12 நாட்கள் கால் மண்டலமாக கொண்டாடப்படுவது சிறப்பு. முதலாம் நாள் தங்க கவசம் சாற்றபட்டு ராஜ அலங்கரத்திலும் மற்ற நாட்கள் சிறப்பு அலங்காரத்திலும் காட்சி தருகிறார். 3ம் நாள் உலகில் எங்கும் இல்லாத வகையில் திருமண வரவேற்ப்பில் மணமகன் மணப்பெண் எவ்வாறு காட்சி தருவார்கலோ அவ்வாறு வல்லப கணபதி திருமண கோலத்தில் நின்ற நிலையில் காட்சி தருகிறார். 10ம் நாள் சத்தபரனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பூ சங்கம் வியாபாரிகள் மிகவும் பிரமாண்ட முறையில் சாமி வீதி உலாவிற்கு பூ அலங்காரம் செய்து தருகின்றனர். இந்த மகிமை வாய்ந்த விநாயகரை வழிப்பட்டு நாம் வாழ்வில் முன்னேற்றம் காண்போமே.

pillayar

இந்த கோயிலிற்கு எவ்வாறு செல்லுவது:
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நகர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். அங்கு இருந்து மிக அருகில் 500மீ தொலைவில் கோவில் வருடம் முழுவதும் கோவில் திறந்து இருக்கும். இரவில் கூட கம்பி கதவின் வழியில் தரிசனம் கிடைக்கும்