இன்றைய ராசிப்பலன் – 12-8-2021

rasi palan - 12-8-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை பார்த்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்வு மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் வழியே நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்கள் நீண்ட நாள் முயற்சிகளுக்கு தகுதியான பலன் கிடைக்கும் பொழுது மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் நீண்ட நாள் கனவு நிறைவேறும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளின் அனுசரணையான நடவடிக்கைகளால் முன்னேறக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை பண ரீதியான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் கடமைக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வெளியிட போக்குவரத்துகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தேவையற்ற வம்பு, வழக்குகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் முன் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமை அதிகரித்து காணப்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும் இதனால் டென்சன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே கருத்தொற்றுமை நிகழும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற, இறக்கங்களை சமாளிக்க கூடிய வகையில் அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருந்த அவர்களுடைய ஆசைகள் நிறைவேறும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சல் மிகுந்த செயல்களை செய்யக் கூடிய வாய்ப்புகள் அமைய இருக்கிறது. கும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்கள் இடத்தில் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு சலுகைகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழி அனுகூலமான பலன்களை காணலாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய வேலை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் புரிதல் மேலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் நேர்மறையான ஆற்றல்கள் மேலும் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வருவது வரட்டும் என்ற மனப்போக்கில் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய புதிய முயற்சிகள் பலன் தரும் வகையில் அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உற்சாகம் தரும் நாளாக இருக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுமான வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சித்தரத்தை மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான பண விவகாரம் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். உத்தியோக ரீதியான விஷயங்களில் அடுத்தவர்களுக்கு வக்காலத்து வாங்காமல் இருப்பது நல்லது. கூடுதல் பொறுப்புணர்வை அதிகரித்து காணப்படும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தி காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

- Advertisement -