இன்றைய ராசிப்பலன் – 21-8-2021

rasi palan - 21-8-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நீங்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு அற்புத பலன்களை பெற இருக்கிறீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். வெளியிட பயணங்களில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கி காணப்படும். தேவையற்ற நண்பர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுக்கு வர இருக்கும் ஆபத்து தானாகவே விலகிவிடும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி சிறப்புற அமையும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நீங்கள் நினைத்தது நடக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரித்து காணப்படும். இதனால் டென்ஷன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். ஆரோக்கியம் மேம்பட்டு வரும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று இதுவரை உங்களுக்கு இருந்து வந்த குழப்பமான மனநிலையில் இருந்து மீள கூடிய வாய்ப்புகள் அமையும். எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுற்றி இருப்பவர்களை அறியும் சந்தர்ப்பங்கள் அமையும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காணும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சீராகி வரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று எதையும் தன்னம்பிக்கையுடன் சாதித்துக் காட்ட கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்து விட்டு முடிவெடுக்கும் சூழ்நிலை நிலவும். சுயமாக எதையும் செய்ய முடியவில்லை என்று மனம் வருந்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் துவங்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. பொருளாதாரம் முன்னேறும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைபட்டு கொண்டிருந்த சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். கணவன் மனைவிக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். நீங்கள் நினைத்த உடன் எதுவும் கைக்கு வந்து விடாது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதால் இடையூறுகள் ஏற்படலாம். எதையும் நிதானத்துடன் கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுப்பதை தாமதப் படுத்துவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டி, பொறாமைகள் நீங்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மன நிலை சீராக இருக்காது. தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது உத்தமம்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் அமையும். நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் அதைவிட வேறு ஒன்று சிறப்பாகவும் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். மேலும் புதிய கூட்டாளிகள் வந்து இணைய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உற்சாகம் அளிக்கும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து எதிர்பார்க்கும் தொகை கைக்கு வந்து சேரும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் யோசனை கிடைக்கும். சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு என்று எதிர்பார்ப்பதை விட சிறப்பான பலன்களைக் காண இருக்கிறீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். மனதில் திட்டமிட்ட காரியங்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் இனிய நாளாக இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -