இன்றைய ராசிப்பலன் – 27-8-2021

rasi palan - 27-8-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்து மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அபிவிருத்தி உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். குடும்ப பொருளாதாரம் உயரும். வெளியிடங்களில் மதிப்பு கூடும்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எது சரியான நேரத்தில் செய்து முடிக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை தொடங்கும் பிறகு கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைக்கு மற்றவர்கள் மத்தியில் அங்கீகாரம் பெறும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கனிவான பேச்சு மற்றவர்களை எளிதில் கவரும் வண்ணம் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி இடையே இருக்கும் முரண்பாடுகள் நீங்கும். புதியது உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டிய நாளாக இருக்கும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதையும் முன்யோசனையுடன் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குழப்பமான மனநிலையில் இருந்து தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்வேகத்துடன் பணியாற்றக் கூடிய சந்தர்ப்பம் உண்டாகும். சக பணியாளர்கள் உடைய ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இதுவரை வாங்கியிருந்த கடன் தொகை குறைவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய அலுவலக பணியாளர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் தீரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு அமையும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பல கேள்விகளுக்கான பதில் கிடைக்க கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய சாமர்த்தியமான திறமையால் பல விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் அனைத்தும் அப்படியே நிறைவேறும். உங்களின் நிர்வாகத் திறமையை பார்த்து மற்றவர்கள் வியக்கும் வண்ணம் நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்புடன் செயல்படும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறி சிறப்பான முன்னேற்றத்தை காணப் போகிறீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார உயர்வு சிறப்பாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதற்கு மேலாகவே அதிர்ஷ்டம் வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு குறித்த விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். பெண்களுக்கு வெளியிடங்களில் மரியாதை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் பலன் தரும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார ரீதியான ஏற்றத்தை காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் லாபம் உண்டாக கூடிய வகையில் அமைய இருக்கிறது. பயணங்களின் போது கவனம் தேவை.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உங்களுடைய ஆர்வம் அதிகரித்து காணப்படும். சிறு சிறு விஷயங்களை கூட பெருமளவு உன்னிப்பாக கவனித்து ஆதாயம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். கடமை உணர்வு அதிகரித்து காணப்படும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் நல்ல ஒரு முன்னேற்றமும் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் தொலைதூரத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத் திறமை மேலும் வளரும். ஆரோக்கியம் சீராகும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் வாய்ப்புகள் அமையப் பெறும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கூட்டாளிகள் மூலம் அனுகூலமான பலன்களைத் பெற இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். பழைய நினைவுகளை அசைபோட்டு பார்க்கக்கூடிய இனிய தருணங்கள் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -