இன்றைய ராசிப்பலன் – 28-8-2021

rasi palan - 28-8-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் வெளியிட பயணங்களை கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. உத்தியோகம் செய்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சண்டைகள் வலுவாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது போல் சில விஷயங்கள் அப்படியே நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கத்துடன் செல்வீர்கள். புதிய விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது உத்தமம். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய பொருளாதார முன்னேற்றம் படிப்படியாக சிறப்புற இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயத்தில் சாதகப்பலன் உண்டாகும். குடும்பத்தில் புதிய வரவு உற்சாகத்தை ஏற்படுத்தும். நீண்டநாள் கடன்கள் அடையக்கூடும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் மேன்மை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிவட்டார நண்பர்களின் வட்டம் விரியும். கணவன் மனைவி இடையே நடைபெற்று வந்த பிரச்சனைகள் தீரும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது உத்தமம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். குடும்பப் பொறுப்புகள் கூடுதலாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் உடைய ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். பிள்ளைகள் வழியே அனுகூல பலன் உண்டாகும். உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது ஆரோக்கியம் சிறக்க ஏதுவாக இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய கடன்கள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய மனநிலை சீராக இருப்பது இடையூறுகள் ஏற்படலாம். எதிலும் அமைதி தேவை.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமை காப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. பெண்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது மனநிலையை ஒருமுகப்படுத்த உதவும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். விடை கிடைக்காத கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நேரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் அனுகூலமான பலன்களை தரும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக நீங்கும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ஏற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. புதிய விஷயங்களை தொடங்குவதால் ஏற்றம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபார உத்திகள் சாதகமாக அமையும். பகைவர்களும் நண்பர்களாக மாறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவும். சமயோஜிதமாக செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் உடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம். சக போட்டியாளர்களுடன் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -