இன்றைய ராசிப்பலன் – 31-8-2021

rasi palan - 31-8-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று பொறுமையை கடைபிடிப்பது மிகவும் நல்லது. முன்கோபத்தால் தேவையில்லாத இழப்புகளை சந்திக்க நேரலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நீங்கள் செய்ய இருக்கும் திடீர் மாற்றம் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் மத்தியில் மதிப்புடன் நடத்தப் படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகளை தவிர்த்து நிதானம் கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மனதில் ஒரு விதமான இனம் புரியாத குழப்பம் நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் தீரும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சக போட்டியாளர்கள் மத்தியில் சாதித்துக் காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்படலாம். கணவன்-மனைவி பிரச்சனைகள் தீரும். மன அமைதி பெற தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பழைய நினைவுகளை அசை போட்டுப் பார்க்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு ஏற்ப பலன்களும் உண்டாகும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும். ஆரோக்கியம் சீராகும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் புதிய பொறுப்புகள் சுமையாக தோன்றலாம். உற்றார் உறவினர்கள் உடைய ஆதரவு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களை சுற்றி இருந்து வந்த பகை நிலை மாறும். மற்றவர்களை எளிதாக கவரும் உங்களுடைய திறமை மேம்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆரோக்கியம் சிறக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்கள் மத்தியில் சவாலான விஷயங்களை கையாள நேரலாம். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். நினைத்ததை சாதிப்பீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேகத்தை விட விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் பாராட்டும் வண்ணம் சில விஷயங்கள் நடக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. காலம் பதில் சொல்லும் என்று விட்டுவிட்டு உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் உடன் இருந்து வந்த பகை மாறும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. வெளியிட பயணங்களின் பொழுது சற்று கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாக வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்ததை சாதிக்க கூடிய நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களுடைய அன்பை சம்பாதித்து எளிதாக காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் விடாமுயற்சியுடன் செயல் பட வேண்டியதாக இருக்கும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் பலன் தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -