இன்றைய ராசிப்பலன் – 5-8-2021

rasi palan - 5-8-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அற்புதமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் தடைப்பட்ட ஒரு செயல் முடிவுக்கு வரும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்க்கும் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி கிடைக்க நிதானம் தேவை. பொருளாதாரம் மேம்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் புதிய அடிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளித்து முன்னேறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைபட்ட சில விஷயங்கள் தடையில்லாமல் நிறைவேறக் கூடிய அற்புதமான வாய்ப்பாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் மேம்பட கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுக்க கூடிய தைரியம் பிறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை கைக்கு வரும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் தடையில்லாமல் நிறைவேறும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பாதை ஒன்று பிறக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாளாக தடைப்பட்டுக் கொண்டிருந்த பல விஷயங்களுக்கான முடிவு வரும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலனை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எதையும் அனுசரித்து சென்றால் மன அமைதி காண்பீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் அதில் ஏதாவது ஒரு தடை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரம் சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தேவையான சமயத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் மந்த நிலையில் இருந்தாலும் பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலை நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனத்துடன் இருப்பது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலனை காணலாம். ஆரோக்கியம் மேம்பட உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். பண விஷயத்தில் மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஊரில் ஒரு பையன் ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் அளவில் மந்தமான நிலை காணப்பட்டாலும் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கக் கூடிய இனிய நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். ஆரோக்கியம் கவனம் தேவை.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மூன்றாம் நபர்களை நம்பி குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். சுயதொழில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மேல் அதிகாரிகள் மூலம் சில நுட்பங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது உற்சாகம் பிறக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பகைகளை எதிர்த்து போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.

- Advertisement -