இன்றைய ராசிப்பலன் – 6-8-2021

rasi palan - 6-8-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தது நடக்கும். பெண்களுக்கு மனதிற்குப் பிடித்த விஷயங்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். பொருளாதாரம் மேம்படும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைத்தது ஒன்று நடக்கும் எனவே கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றமான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். பொருளாதார ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் நினைத்த விஷயங்கள் கைக்கூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். பெண்கள் தேவையற்ற வெளியிட பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது உத்தமம். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து மோதல்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் கனவுகள் நடைபெறும். பெண்களுக்கு நினைத்தது நடக்கும். பொருளாதாரம் படிப்படியாக முன்னேறும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உடன் இருப்பவர்களில் நல்லவர்கள் யார்? என்பதை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் எடுத்த அடி மாறாமல் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காணப்படும். பெண்களுக்கு புதிய பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத்தை சீர் செய்யலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் நிதானத்தை கடைபிடிப்பதும் உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மென்மேலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் மூலம் அனுகூலமான பலன்களை பெற்றுக் கொள்ளும் யோகமுண்டு. பெண்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். பொருளாதார பந்தம் காணப்படும். ஆரோக்கியம் சீராகும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்றும் நினைக்க அதை விட சிறப்பான ஒன்று கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் பெருகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் காப்பது நல்லது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் வெற்றி அடைய கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகை ஈடுபடுத்திய அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவை எரிச்சலூட்டும் வகையில் அமையும். பெண்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது உத்தமம். குடும்பத்தினரிடம் எதையும் பெண்கள் ஆலோசித்து கொள்வது நல்லது. பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் வலுவாகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருட்களை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வீர்கள். பணியாளர்கள் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தானாக கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு மனோதிடம் அதிகரிக்கும். பொருளாதாரம் சீராகும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் திட்டமிட்டு செய்யக்கூடிய வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாமல் முன்கூட்டியே சிந்தித்து செயல்படுவது உத்தமம். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தது நடக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். வருமானம் சீராக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இக்கட்டான சூழ்நிலையை கூட எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும். சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை எச்சரிக்கை தேவை. தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நிம்மதி உண்டாக விநாயகப் பெருமானை வழிபடுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். பெண்களுக்கு தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

- Advertisement -