இன்றைய ராசிப்பலன் – 7-8-2021

rasi palan - 7-8-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்ப தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். பெண்கள் தேவையற்ற வெளியிட பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இழுபறியாக இருந்த சில வேலைகள் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி எதிர்பார்த்த விடை கிடைக்கும். பெண்களுக்கு மனோ தைரியம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எங்கிருந்தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பண தொகை வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பெண்கள் குடும்ப தேவைகளை அறிந்து செயல்படுவார்கள். வேலை பளு அதிகரித்து டென்ஷன் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிட பயணங்களில் புதிய அறிமுகம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளுடன் இணைந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தது நடக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பொருளாதாரம் சீராக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளை முன்னின்று செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் வெற்றி காண கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செழிக்க புதிய யுத்திகளை கையாளுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டுக்கொடுத்து மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமை பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய பெருமைக்கு உரிய பலன்களும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சூட்சுமங்களை உணர்ந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்
விசிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவு பெருக கூடிய அற்புதமான வாய்ப்பு அமையும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிறைவுடன் இருக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சில விஷயங்களை நேர்மறையாக நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்கள் இரக்க குணத்தால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு நீங்கி புத்துணர்வு தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தது நடக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை மதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்டநாள் நண்பரை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப் பட்டாலும் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பெண்களுக்கு அதிர்ஸ்டம் தரும் நாளாக இருக்கும்.

- Advertisement -