இன்றைய ராசிப்பலன் – 8-8-2021

rasi palan - 8-8-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த நன்மைகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான நட்பு வட்டங்கள் பெரிய வாய்ப்புகள் அதிகம். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும். பெண்களுக்கு நினைத்தது நடக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை தைரியமாக இருக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியத்தை நினைத்த படி சாதித்து முடிப்பீர்கள். கணவன்-மனைவியிடையே பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் டென்ஷன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய நிலுவையில் இருக்கும் சரக்குகள் விற்பனை ஆகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பால் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுதல் கவனம் தேவை. பெண்கள் வேலை பளு காரணமாக டென்சனுடன் காணப்படுவார்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பழைய பாக்கிகளை வசூலிக்க கூடிய வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அலுவலகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய நல்ல வாய்ப்புகள் அமையும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வார்த்தகம் சிறப்பாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரித்து காணப்படும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுபவத்தில் சில முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் உங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகளால் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயர கூடிய சந்தர்பங்கள் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் தீரும். நீங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுமானவரை அமைதி காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை தவிர்த்து கொள்வது உத்தமம். வம்பு வழக்குகளில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு மேலும் வலுவாக நிற்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத தர்ம சங்கடங்களை தவிர்க்க பொறுமை தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இணக்கமான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் சலுகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வர வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுமானவரை வெளியிட பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு அமையும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூடுமானவரை வீண் விரயங்களை தவிர்ப்பது உத்தமம்.

- Advertisement -