இன்றைய ராசிப்பலன் – 8-9-2021

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
மேஷராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் தைரியமாக செயல்படப் போகிறீர்கள். நீங்கள் தொட்ட காரியத்தில் வெற்றி உங்களுக்கு கிடைக்கும் வரை ஓய மாட்டீர்கள். இன்றைக்கு உங்களுக்கு புகழ்ச்சி கிடைப்பது நிச்சயம். விடாமுயற்சியோடு துணிச்சலோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள் இன்று. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சிந்தனையிலேயே இருப்பீர்கள். கொஞ்சம் மந்தமான சூழ்நிலை தான் நிலவும். இருப்பினும் சோம்பேறித்தனத்தை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகப் பணியில் உங்களுடைய வேலையை மிச்சம் வைக்காமல் முடிப்பது நன்மை தரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிம்மதி தரக்கூடிய நாளாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகள் இன்று நல்லதொரு முடிவுக்கு வரும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவிடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் கொஞ்சம் கவனம் தேவை.

கடகம்:
கடக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சியில் ஈடுபடலாம். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சியில் இருந்த தடை விலகும். உங்களுடைய வாழ்க்கை துணைக்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொண்டால் நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கப் போகின்றது. மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் தேவையற்ற வீண் செலவுகள் வந்து கொஞ்சம் தொல்லை கொடுக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் சுமூகமான உறவு நிலவும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இன்றைய நாள் எவ்வளவு தான் உழைத்தாலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்க போவது கிடையாது. உங்களுடைய கடமையிலிருந்து தவறாதீர்கள். வேலையை செய்யுங்கள். அதற்கான பலனை எதிர்பார்க்காதீர்கள். அவ்வளவு தான். எல்லாம் சுமூகமாக தான் நடக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. முடிந்தவரை இன்றைய தினம் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. முக்கியமான முடிவு எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். வேலை செய்யும் இடத்தில் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகும் நாளாக இருக்கப் போகின்றது. நீங்களே எதிர்பாராத நல்ல செய்தி ஒன்று உங்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு காரியத்தையும் அவசர அவசரமாக தொடங்கக் கூடாது. பதறாத காரியம் சிதறாது நடக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நிதானம் தேவை. பொறுமையோடு செயல்பட்டால் இன்றைய நாள் உங்களுக்கு பிரச்சினை இல்லாமல் செல்லும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக இருந்து வந்த ஒரு பிரச்சினைக்கு இன்று முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக வேலை செய்து நல்ல பெயரை வாங்குவீர்கள். சொந்தத் தொழில் புதிய யுக்திகளை அறிமுகம் செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இன்றைய நாள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு சாதகமாக அமையாது. நீங்கள் எவ்வளவு தான் ஓடினாலும், இன்றைய நாள் கொஞ்சம் மந்தமான நாளாகத்தான் இருக்கும். தேவையற்ற மனசஞ்சலங்கள் வந்து நீங்கும். வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் தலை தூக்கும். பொறுமையோடு இருங்கள் இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவுகரியமான நாளாக அமையப் போகின்றது. நல்ல ஓய்வு கிடைக்கும். மன நிம்மதியோடு திருப்தியாக சாப்பிட்டுவிட்டு, நன்றாக ஓய்வு எடுத்து நாளை கழிக்க போகிறீர்கள். வேலை செய்யும் இடத்திலும் பெரியதாக பிரச்சனை இருக்காது. சொல்லப்போனால் ராஜயோகம் தான் இன்றைக்கு உங்களுக்கு.

- Advertisement -