- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ரேஷன் பச்சரிசியில் ஒருமுறை இப்படி பொங்கல் செய்து பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். இது ரேஷன்...

ரேஷன் பச்சரிசியில் ஒருமுறை இப்படி பொங்கல் செய்து பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். இது ரேஷன் பச்சரிசியில் செய்த பொங்கலா? யாராலயும் கண்டுபிடிக்கவே முடியாது.

- Advertisement -

பெரும்பாலும் நம்முடைய வீட்டில் வாங்கக்கூடிய ரேஷன் அரிசியை நாம் பயன்படுத்துவது கிடையாது. ஆனால் அந்த ரேஷன் பச்சரிசியை வைத்து ஒரு முறை இப்படி பொங்கல் செய்து பாருங்கள். கடையிலிருந்து வாங்கிய பச்சரிசியில் எப்படி பொங்கல் செய்கின்றோமோ அதே சுவையில் தான் இருக்கும். ஒரே ஒருமுறை உங்க வீட்ல இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. பிறகு ரேஷன் அரிசியில் தான் வீட்டில் பொங்கல் செய்வீர்கள். சரி, நேரத்தைக் கடத்தாமல் நேரடியாக ரெசிபிக்கள் செல்வோம்.

ரேஷன் அரிசியாக இருந்தால் கட்டாயம் அதில் தூசுகள் வண்டுகள் இருக்கத்தான் செய்யும். முதலில் அந்த பச்சரிசியை நன்றாக புடைத்து அதில் இருக்கும் தூசு வண்டுகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

2 டம்ளர் பச்சரிசி, 1 டம்ளர் பாசிப்பருப்பு சரியான அளவாக இருக்கும். முதலில் 2 தம்ளர் அளவு பச்சரிசியை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். கொஞ்சம் கல் உப்பு சேர்த்து பச்சரிசியை கழுவும் போது இதில் இருக்கும் அழுக்கு அத்தனையும் நமக்கு வெளியேறிவிடும். அரிசி பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும்.

அதன்பின்பு கழுவிய பச்சரிசியோடு, 1 கப் பாசிப்பருப்பை சேர்த்து அரிசியும் பருப்பும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை, நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அரிசி பருப்பை மீண்டும் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். 2 டம்ளர் பச்சரிசி, 1 கப் பாசிப்பருப்பு. இதற்கு 9 டம்ளர் அளவு தண்ணீர் நமக்கு சரியாக இருக்கும். அதாவது 1 டம்ளருக்கு 3 டம்ளர் தண்ணீர் அளவு என்பது கணக்கு. எந்த டம்ளரில் பச்சரிசியை அளக்கிறீங்கலோ, பாசிப்பருப்பையும் தண்ணீரையும் அதே டம்ளரில் அளந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது குக்கரில் ஊறவைத்த அரிசி பருப்பை போட்டு விட்டு, அதில் 9 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்பின்பு பொங்கலுக்கு தேவையான அளவு உப்பு, சீரகம் 1 ஸ்பூன், மிளகு 1/2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு பொங்கலை குழையக் குழைய வேக வைத்து அடுப்பை அணைத்து கொள்ளுங்கள். ப்ரஷர் அடங்கட்டும். அதன்பின்பு குக்கர் மூடியை திறந்து கொள்ளுங்கள்.

இப்போது இந்த பொங்கலுக்கு தாளிப்பு கொடுக்க வேண்டும். முதலில் தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, முந்திரி பருப்புகளை உடைத்துப் போட்டு பொன்னிறமாக வறுத்து அப்படியே அதை பொங்கலில் கொட்டி விடுங்கள். அதன் பின்பு மீண்டும் 2 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பொடியாக துருவிய இஞ்சி இரண்டு ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, பெருங்காயம் 1/2 ஸ்பூன், மிளகு தூள் 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை கொட்டி அப்படியே தாளித்து இதை அப்படியே பொங்கலில் கொட்டி கலந்துவிட்டால் சூப்பரான ரேஷன் கடை அரிசி பொங்கல் மணக்க மணக்க தயாராக இருக்கும்.

பின்குறிப்பு: உங்களுக்கு தேவைப்பட்டால் வெறும் நெய்யை சேர்த்து பொங்கலை தாளிக்கலாம். விருப்பமில்லாதவர்கள் கொஞ்சம் சமையல் எண்ணெய்யை சேர்த்துக் கொள்வதில் தவறு கிடையாது. ஆனால் கொஞ்சமாக நெய் சேர்த்தால் தான் பொங்கலில் மனம் இருக்கும். ஒரு முறை உங்க வீட்டையும் இப்படி ரேஷன் அரிசியில் பொங்கலை ட்ரை பண்ணி பாருங்க. ரேஷன் அரிசி அல்லாமல் கடையில் வாங்கிய பச்சரிசியில் இந்தமுறையில் பொங்கல் செய்தாலும் சுவையாகத்தான் இருக்கும்.

சற்று முன்