ரேஷன் அரிசியில் கூட வெள்ளை வெளேரென பஞ்சு போல சுவையான ஆப்பம் செய்வது இவ்வளவு ஈசியா? இது கூட தெரிஞ்சுக்காம போயிட்டோமே!

ration-rice-aappam
- Advertisement -

பலரும் ரேஷன் பொருட்களில் அரிசியை வாங்கியவுடன் அதை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவது உண்டு. ஆனால் ரேஷன் அரிசியில் கூட வெள்ளை வெளேரென பஞ்சு போல சுவையான ஆப்பம் எளிதாக தயாரிக்க முடியும்! ரேஷன் அரிசி கொண்டு இது போல நிறைய விஷயங்களை நாம் ஆரோக்கியமான முறையில் உணவுகள் தயாரிக்க முடியும். அதற்கு அரிசியை எப்படி சுத்தம் செய்வது? பஞ்சு போல ஆபத்தை எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள விருக்கிறோம்.

ரேஷன் அரிசியில் ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
ரேசன் பச்சரிசி – 2 ஆழாக்கு, ரேஷன் புழுங்கல் அரிசி – 1 ஆழாக்கு, வெந்தயம் – ஒரு டீஸ்பூன், உளுந்து – கால் ஆழாக்கு, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

ரேஷன் அரிசியில் ஆப்பம் செய்முறை விளக்கம்:
ரேஷன் அரிசியில் ஆப்பம் செய்வதற்கு 2 ஆழாக்கு ரேஷனில் கொடுத்த பச்சரிசி தேவை. அது போல புழுங்கல் அரிசி ஒரு ஆழாக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு அரிசியும் ஒன்றுடன் ஒன்று கலந்து விட்ட பிறகு வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு ஸ்பூன் அளவிற்கு கல் உப்பு போட்டு நன்கு தேய்த்து அரிசியை கழுவ கழுவ ரேஷன் அரிசியில் இருக்கும் ஒரு விதமான நாற்றம் நீங்கி விடும்.

ரேஷன் அரிசியில் இருந்து வரக் கூடிய இந்த நாற்றம் தான் நமக்கு இதை வைத்து சமையல் செய்ய பிடிப்பதில்லை ஆனால் இதையே உணவாக உட்கொள்ளும் நிறைய பேர் உண்டு எனவே இவ்வாறு கல் உப்பு போட்டு நன்கு தேய்த்து ஆறிலிருந்து ஏழு முறை சுத்தமான தண்ணீர் ஊற்றி நன்கு கழுவுங்கள். தண்ணீர் நிறம் மாறி வெள்ளை வெளேரென்று வர வேண்டும். அந்த அளவிற்கு அரிசியை கழுவிய பின்பு அரிசியை அளந்த அதே ஆழாக்கில் கால் ஆழாக்கு அளவிற்கு வெள்ளை உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு மீண்டும் ஒருமுறை அலசி பின்னர் தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

அரிசி 3 மணி நேரம் ஊறிய பிறகு கிரைண்டரில் போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த மாவுடன் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் மாவு சீக்கிரம் புளித்து நன்கு ஆப்பம் பதத்திற்கு பொங்கி வரும். எட்டிலிருந்து பத்து மணி நேரம் இரவு முழுவதும் நன்கு புளித்த பின்பு மறுநாள் காலையில் எடுத்து அதை நன்கு கரண்டி வைத்து கலக்கி எல்லா மாவையும் பயன்படுத்தாமல் கொஞ்சம் மாவை மட்டும் எடுத்து தேவையான அளவிற்கு தண்ணீர் கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் ஆப்ப கடாயில் ஒரு கரண்டி மாவை ஊற்றி ஒரே ஒரு சுற்று மெதுவாக அப்படியே சுற்றி பின் தேவையான அளவிற்கு எண்ணெய் ஆபத்தை சுற்றிலும் விட்டு மூடி வைத்து 3 நிமிடத்தில் எடுத்து பார்த்தால் ஓரம் முழுவதும் மொருமொரு வென்றும், நடுப்பகுதியில் நன்கு பஞ்சு போலவும் ஆப்பம் சூப்பராக வெந்து வந்திருக்கும். தோசைக்கலில் தடிமனாக தோசை வார்த்து மூடி வைத்து எடுதால் ஆப்ப கடாய் கூட தேவையில்லை. இனி ஆப்பம் செய்ய ரேஷன் அரிசியே போதும் தானே?

- Advertisement -