ரேஷன் அரிசியில் இப்படி மட்டும் ஆப்பம் செய்து தான் பாருங்களேன்! அப்படியே பஞ்சு போல சாஃப்டாக வரும். இந்த ஆப்பத்தை ரேஷன் அரிசியில் தான் செய்தீர்கள் என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டாங்க.

aapam

இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும், டிப்ஸை பின்பற்றி ரேஷன் அரிசியில் ஆப்பம் செய்தால், யாருமே ரேஷன் அரிசியை வீணாக வெளி ஆட்களுக்கு கொடுக்க மாட்டீர்கள். நீங்களே ஆப்பம் செய்து கொள்வீர்கள். அந்த அளவிற்கு சூப்பரான சாஃப்பிட்டானா ஒரு ஆப்ப ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரேஷன் அரிசி என்றாலே நிறைய பேருக்கு இஷ்டம் கிடையாது. ஆனால் ஒரே ஒரு முறை ரேஷன் அரிசியில் இப்படி ஆப்பம் செய்தால் மீண்டும் மீண்டும் இந்த ஆபத்தை செய்து கொண்டே இருப்பீர்கள்.

rice

முதலில் இந்த ஆப்பம் செய்ய தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். ரேஷன் புழுங்கல் அரிசி, ரேஷன் பச்சரிசி, இந்த இரண்டு அரிசியையும் நீங்கள் இந்த ஆப்பம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் புழுங்கல் அரிசி – 3 கப், பச்சரிசி – 3 கப், வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன் அளவு, உளுந்து – 1/4 கப், வடித்த சாதம் இரண்டு கைப்பிடி அளவு.

அரிசியை அளந்த அந்த கப்பில் 1/4 கப் அளவு உளுந்தை எடுத்துக் கொண்டால் போதும். அளவாக பார்த்தால் 2 கிலோ அரிசிக்கு 100 கிராம் உளுந்து போதுமானது.

ulunthu-venthayam-idly

முதலில் பச்சரிசியையும் புழுங்கல் அரிசியையும், ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவவேண்டும். 6 லிருந்து 10 முறை கழுவினாலும் தவறு இல்லை. கொஞ்சமாக கல்லுப்பு போட்டு அரிசியில் இருக்கும் அந்த வாடை நீங்கும் வரை உராசி கழுவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதை சரியாக செய்து விட்டால் ஆப்பம் வெள்ளையாக பஞ்சுபோல வந்துவிடும்.

- Advertisement -

அரிசி 3 லிருந்து 4 மணி நேரம் வரை ஊற வேண்டும். உளுந்தையும் வெந்தயத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அரிசியை கிரைண்டரில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை அரைக்கும்போதே வேக வைத்த சாதத்தையும் இந்த அரிசியோடு சேர்த்து அரைக்க வேண்டும். 15 நிமிடங்களில் இந்த அரிசியை கிரைண்டரில் அரைத்து விடலாம்.

appam1

அடுத்தபடியாக ஊற வைத்து இருக்கும் உளுந்தம் பருப்பையும், வெந்தயத்தையும் போட்டு தனியாக ஆட்டி எடுத்து அரிசி மாவோடு சேர்த்து உங்கள் கைகளைக் கொண்டு கரைத்து வைத்துக் கொள்ளலாம். இந்த ஆப்ப மாவு, இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த மாவை தாராளமாக கிரைண்டரை கழுவி தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைக்கலாம், என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

appam2

இந்த ஆப்பத்திற்கு சோடா உப்பு சேர்க்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. கரைத்த மாவை அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள். 8 மணி நேரம் புளிக்கட்டும். மாவு புளித்ததும் அதன் பின்பு, இந்த மாவை ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலக்கி தேவையான அளவு மாவை மட்டும் ஒரு தனியான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். மீதி மாவை பிரிட்ஜில் வைத்து விடுங்கள். தனியாக அப்பம் சுட எடுத்து வைத்திருக்கும் மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிலர் இந்த மாவோடு சர்க்கரை, தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால் சேர்த்து கரைத்து ஆப்பம் ஊற்றுவார்கள்.

appam3

உங்களுக்கு எதுவுமே தேவை இல்லை என்றால் இந்த மாவை அப்படியே கரைத்து ஆப்ப கடாயில் ஊற்றி ஒரு சுழட்டி சுழட்டி ஒரு மூடி போட்டு 2 லிருந்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான அப்பம் உங்களுக்கு கிடைத்திருக்கும். உங்களுடைய வீட்டில் ஆப்ப கடாய் இல்லை என்றாலும் தோசைக்கல்லில் கல்லில் தோசை போல ஊற்றி, மேலே ஒரு மூடி போட்டு வேக வைத்து எடுத்தால் பஞ்சு போல ஆப்பம் தயார் ஆகி இருக்கும். ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு ஆப்ப கடாயில் எண்ணெய் தேய்க்க மறக்காதீர்கள்.

appam4

இதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய்ப்பால் வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அசைவ பிரியர்கள் அசைவ குருமாவை ஆப்பத்திற்கு தோதாக வைத்துக் கொண்டால் மேலும் சுவையாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கவும்.