மாடி தோட்டத்திற்கு உயிர் உரம் கொடுக்க 1 டம்ளர் ரேஷன் அரிசி இருந்தால் போதுமே! அட்டகாசமான விளைச்சலை பெறலாம்.

plant-rice

நாம் விதவிதமான செடிகளை வாங்கி வைத்து வளர்த்து வந்தாலும் அதற்கு தேவையான உரம் கொடுக்கவில்லை என்றால் விரைவாக வளர்ச்சி அடைவது இல்லை. குறிப்பாக பூச்செடிகள், காய்கறி செடிகள் போன்றவை செழிப்புடன் தன் சேவையை புரிய கட்டாயம் அதற்கு தேவையான உயிர் உரத்தை கொடுத்தாக வேண்டும். அவ்வகையில ரேஷன் அரிசியை பயன்படுத்தி எளிதாக உயிர் உரம் கொடுப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

plant-grow-bag

தக்காளி செடி, மிளகாய் செடி, வெண்டைக்காய், அவரைக்காய், மல்லி, ரோஜா, முல்லை, ஜாதி மல்லி, செம்பருத்தி, கனகாம்பரம் போன்ற எந்த வகையான பூச்செடிகள், காய்கறி செடிகளாகவும் இருந்தாலும் அதற்கு தேவையான ஊட்டசத்துக்கள் கொடுக்கும் பொழுது செழிப்புடன் வளரும். அதற்கு நாம் அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியமுமில்லை. ஒரு டம்ளர் ரேஷன் அரிசி வைத்துக் கொண்டு இந்த உயிர் உரத்தை தயார் செய்து கொண்டால் செடிகள் கருகாமல் பச்சைப் பசேல் என நிறைய பூக்களையும், காய்களையும் நமக்கு கொடுக்கும்.

ஆனால் இதைத் தயாரிப்பதற்கு சுமார் ஒரு மாதமாவது ஆகிவிடும். ஒருமுறை தயார் செய்து வைத்துக் கொண்டால் மூன்று மாதம் வரை தாராளமாக செடிகளுக்கு உயிர் உரமாக கொடுத்து வரலாம். எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாத இயற்கையான முறையில் எரியூட்டி உருவாக்கப்பட்ட உயிர் உரம் தயாரிப்பது எப்படி?

rice-bugs

செடிகளுக்கு நாம் கொடுக்கும் எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் மக்கி உரமாக இருக்க வேண்டும். சுமார் 12 மணி நேரம் ஒரு டம்ளர், அதாவது 200 கிராம் ரேஷன் அரிசியை தண்ணீரில் நன்கு அலசி ஊற வைத்துக் கொள்ளுங்கள். 12 மணி நேரம் கழித்து அதில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி வெறும் அரிசியை மட்டும் பிரித்து எடுத்து மண் கலவையில் அல்லது மூங்கில் கொம்பில் போட்டு தண்ணீர் மற்றும் காற்று புகாதபடி மூடி வைத்து மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்.

- Advertisement -

மூன்று நாட்களுக்கு பிறகு எடுத்துப் பார்த்தால் அதில் நல்ல பூஞ்சைகள் உருவாகி இருக்கும். அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு 25 நாட்கள் வரை நன்கு புளிக்க விட்டு எடுத்து பார்த்தால் பேஸ்ட் போல நமக்கு உயிர் உரம் அருமையாக தயாராகி இருக்கும். இதில் இருக்கும் சத்துக்கள் எல்லா விதமான செடிகளுக்கும் வளர்ச்சி ஊக்கியாக செயல்பட்டு நமக்கு நல்ல விளைச்சலைக் கொடுக்கும்.

gardening3

மாடி தோட்டம் வைத்திருப்பவர்கள் அல்லது காய்கறி, பூச்செடிகளை அதிகமாக வளர்ப்பவர்கள் இந்த முறையில் உயிர் உரம் தயாரித்து பயன்படுத்தினால் விரைவாகவும், நிறைவாகவும் அறுவடை செய்து மகிழலாம். 10 லிட்டர் தண்ணீருடன் இந்த பேஸ்ட் ஒரு ஸ்பூன் கலந்தால் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை செடிகளுக்கும் வேர் பகுதி முதல் இலைகள், தழைகள் வரை அத்தனை இடங்களிலும் தெளித்து உயிர் உரத்தை சத்தாக கொடுக்கலாம்.

gardening

ஒருமுறை தயார் செய்து வைத்துக் கொண்டால் இதனை மூன்று மாதம் வரை வெளியில் வைத்து தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேலும் வைக்க வேண்டுமென்றால் ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் அரிசியில் இருக்கும் சத்துக்களும் அதனை உரமாக மாற்றியபின் கிடைக்கும் இயற்கை சத்துடன் கூடிய இந்த உரமானது கைமேல் பலன் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.