டீ கொதிக்கிற 10 நிமிஷத்துல, இந்த ரவை போண்டாவை சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். சூப்பர் மொறு மொறு ‘ரவை போண்டா’ எப்படி செய்வது?

rava-bonda

ஈவ்னிங் டைம்ல ரவையை வைத்து சூப்பரான மொறு மொறு  போண்டாவை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பக்கம் ஒரு ஸ்டவ்வில் டீ கொதிக்க விடுங்கள். இன்னொரு ஸ்டைல போண்டா ரெடி பண்ணிடலாம். டீ கொதிக்கும் பத்து நிமிஷத்துல போண்ட ரெடியாயிடும். எல்லோருக்கும் பிடித்தமான இந்த ரவை போண்டாவை சுலபமாக எப்படி செய்வது தெரிந்து கொள்ளலாமா? இந்த போண்டாவை செய்வதற்கு குறிப்பாக, வெளியில் போய் எந்த ஒரு பொருளையும் வாங்க தேவையில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்கள் மட்டுமே போதும்.

rava-bonda1

தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப், தயிர் – 1 கப், மைதா – 1/4 கப், சோடா உப்பு – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு. (ரவையை எந்த கப்பில் அளந்து எடுத்துக் கொள்கிறார்களோ, அதே கப்பில் தயிரையும், மைதாவையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.)

Step 1:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ரவை, மைதா, சோடா உப்பு, தேவையான அளவு உப்பு, போட்டு முதலில் நன்றாக உங்கள் கையாலேயே கலந்து விட்டு விடுங்கள். அதன் பின்பாக, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, இஞ்சித் துருவல் சிறிதளவு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சீரகம் சிறிதளவு, பெருங்காயம் ஒரு சிட்டிகை, இந்தப் பொருட்கள் அனைத்தையும், ரவையோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.

rava-bonda3

மேல் குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் மாவோடு சேர்த்து உங்கள் கைகளாலேயே பிசைந்து விட்டு, அதன் பின்புதான் தயிர் ஊற்றி பிசைய வேண்டும். நீங்கள் மாவை பிசைய பிசைய ரவை, தயிரை நன்றாக இழுத்துக் கொள்ளும். மாவு கெட்டிப் பதத்தில் இருக்கும் போது, கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.

Step 2:
மாவு 5 நிமிடம் வரை ஊறட்டும். தண்ணீரும், தயிரும் இழுத்துக்கொண்டு மாவு கொஞ்சம் கெட்டி பக்கத்தில் வந்து விட்டால், மீண்டும் ஒரே ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவானது புசுபுசுவென உளுந்த மாவு பதத்தில் இருக்க வேண்டும். உளுந்த வடை செய்ய மாவை அரைப்போம் அல்லவா? அதே பக்குவத்தில் ரவை போண்டா விற்கும் மாவு இருக்க வேண்டும்.

rava-bonda4

Step 3:
போண்டாவை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை கடாயில் ஊற்றி, நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடு ஆன பின்பு, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, உருண்டை உருண்டைகளாக மாவை கிள்ளி, கடாயில் உள்ள எண்ணெயில் விடவேண்டும். போண்டா பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து, சுட சுட பரிமாறுங்கள்! அலாதியான சுவையில், அற்புதமான போண்டா ரெடி. ஒன்று கூட மிச்சம் இருக்காது. தேவைப்பட்டால் தேங்காய் சட்னி வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு படித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும், இன்னைக்கு ஈவினிங் ட்ரை பண்ணி பார்க்கலாமே!