தோனி மற்றும் கோலி ஆகியோர் உலகக்கோப்பை போட்டிகளில் இடம் மாற்றி களமிறக்க படுவார்கள் – ரவி சாஸ்திரி அறிவிப்பு

Ravi

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

koli-dhoni

எனவே இந்த தொடர்தான் உலககோப்பைக்கு முன்னதான இந்திய அணியின் கடைசி ஒருநாள் தொடராகவும், இந்திய அணியின் பலத்தினை சோதிக்கும் ஒரு தொடராகவும் அமையும். இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் தோனி ஆகியோர் தங்களது வழக்கமான இடத்தில் ஆடாமல் மாற்றி இறக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் : கோலி உலகக்கோப்பை போட்டிகளில் தான் வழக்கமாக ஆடும் இடமான 3ஆம் இடத்தில் ஆடாமல் 4ஆம் இடத்தில் களமிறக்கப்படுவார். மேலும், தோனி போட்டியை பினிஷ் செய்யாமல் முன்கூட்டியே 5ஆம் இடத்தில் களமிறக்க போவதாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

dhoni

இந்த உலகக்கோப்பை தொடரை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என அனைவரும் கூறிவரும் நிலையில் இந்த இடமாற்றங்கள் அவசியமா என்று அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

இந்த வருடத்திற்கான முதல் ஐ.பி.எல் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக மார்ச் ,மாதம் இந்த தேதியில் துவங்குகிறது. முதல் 15 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்