வாழைக்காயில் பிரெஞ்சு ஃப்ரை-யா? அசத்தலான சுவையில் வித்தியாசமான மொறு மொறு ஸ்னாக்ஸ்

raw-banana-fries1_tamil
- Advertisement -

உருளைக்கிழங்கு பிரெஞ்சு ஃப்ரை எல்லோரும் சாப்பிட்டு பார்த்திருப்போம். அது ரொம்பவே பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் வகையாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இருந்து வருகிறது. அந்த வகையில் வாழைக்காயில் அசத்தலான சுவையில் வித்தியாசமாக மொறு மொறுன்னு சூப்பரான ஸ்நாக்ஸ் வகை போல இந்த வாழைக்காய் ஃப்ரஞ்ச் ஃப்ரை ரெசிபி இப்படியும் செய்து பார்க்கலாம், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். வாழைக்காய் ஃப்ரஞ்ச் ஃப்ரை எப்படி செய்வது? என்று பார்ப்போமா?

வாழைக்காய் பிரெஞ்சு ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 1, சோள மாவு – 4 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – இரண்டு டேபிள்ஸ்பூன், மிளகாய் பொடி – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மைதா மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் – ரெண்டு சிட்டிகை, பிரட் கிரம்ஸ் – தேவையான அளவு.

- Advertisement -

வாழைக்காய் பிரெஞ்சு ஃப்ரை செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு வாழைக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் தோலை சீவி விட்டு நடுப்புற பாகத்தில் இருக்கும் வாழைக்காயை பிரெஞ்சு ஃப்ரைக்கு தேவையான அளவிற்கு நீள நீளமாக மெல்லிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களிடம் பிரட் கிரம்ஸ் அல்லது ரஸ்க் தூள் இருந்தால் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு சிறிய பௌலில் கான்பிளவர் மாவு ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரிசி மாவு, வெறும் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் கொஞ்சம் போல் உப்பு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மாவில் தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. ட்ரை ஆக இருக்க வேண்டும். பின்னர் மற்றொரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மீதம் இருக்கும் ரெண்டு டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவுடன் மைதா மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். சிட்டிகை அளவிற்கு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து உப்பு கொஞ்சம் போட்டு கொஞ்சம் போல தண்ணீர் விட்டு கெட்டியாக தோசை மாவு போல கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒவ்வொரு வாழைக்காய் துண்டுகளையும் எடுத்து முதலில் தயார் செய்துள்ள மாவில் புரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த தோசை மாவு போல இருக்கக்கூடிய கலவையில் முக்கிய எடுக்க வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் இதில் முட்டையையும் சேர்த்துக் கொள்ளலாம். முக்கி எடுத்த பின்பு பிரட் கிரம்ஸ் அல்லது ரஸ்க் தூள் உங்களிடம் இருப்பவற்றில் கடைசியாக புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது போல ஒவ்வொரு துண்டையும் முதலில் டிரையாக இருக்கும் மாவிலும், அடுத்து தண்ணீராக இருக்கும் மாவிலும் முக்கி எடுத்து பிரட் க்ரம்ஸில் புரட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் மிதமான சூட்டில் எண்ணெயை காய விடுங்கள். எண்ணெய் அதிக சூட்டுடன் இருந்தால் பிரட் கிரம்ஸ் போட்டவுடன் கரிஞ்சி போக வாய்ப்புகள் உண்டு. போடும் முன்பு ஒரு முறை தட்டில் லேசாக தட்டிக் கொள்ளுங்கள். ஒட்டிக் கொண்டிருக்கும் பிரட் கிரம்ஸ்கள் கீழே விழுந்து விடும். பின்னர் எண்ணெயில் போட்டு எல்லா புறமும் நன்கு பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டு பாருங்கள், அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -