2 வாழைக்காய் இருந்தா போதும் புதுமையான முறையில் 5 நிமிடத்தில் சூப்பரான, ஆரோக்கியமான ‘வாழைக்காய் வறுவல்’ செய்துவிடலாம்!

raw-banana-fry0

பெரும்பாலும் வாழைக்காய் செய்வதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியது இல்லை என்பதால் அடிக்கடி செய்வது உண்டு. ஆனால் இதை அடிக்கடி சாப்பிடுவதால் வாய்வு ஏற்படும் என்கிற காரணத்தினால் சிலர் தவிர்ப்பதும் உண்டு. ஒரே மாதிரியாக வாழைக்காய் பொரியல் அல்லது வறுவல் செய்து சாப்பிட்ட நீங்கள் புதுமையான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்! வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியம் மிகுந்த இந்த வாழைக்காய் வறுவல் செய்ய ஐந்தே நிமிடம் போதும், சட்டென செய்து விடலாம். சரி, அதை எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

raw-banana-fry

‘வாழைக்காய் வறுவல்’ செய்ய தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 2
சமையல் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
சோம்பு – அரை டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
பூண்டு பல் – 5

raw-banana-vazhakkai

மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு
உப்பு – தேவையான அளவிற்கு

- Advertisement -

‘வாழைக்காய் வறுவல்’ செய்முறை விளக்கம்:
இரண்டு முற்றிய வாழைக் காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதைத் தோல் நீக்கி உடனே தேவையான அளவுகளில் வெட்டி தண்ணீரில் போட்டு விட வேண்டும். இல்லையென்றால் வேகமாக கறுத்து போய்விடும். இப்போது நாம் செய்ய இருக்கும் வாழைக்காய் வறுவலுக்கு வாழைக் காய்களை செவ்வக வடிவில் கியூப்களாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலைகளை உருவி கழுவி போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் சோம்பு, அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் மிளகு, தோல் உரிக்காமல் 5 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

raw-banana-fry2

அடி பிடிக்காத வாணலியை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி தண்ணீரில் போட்டிருக்கும் வாழைக்காய்களை நான்கு நீர் இல்லாமல் வடித்து எண்ணெயில் போட்டு லேசாக பிரட்டி எடுக்க வேண்டும். வாழைக்காய் பாதியளவு வெந்த உடன் அதில் மஞ்சள் தூள் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மீண்டும் லேசாக பிரட்டவும். பின்னர் அரைத்து வைத்த கலவைகளை சேர்த்து, ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெறும் மிளகாய் தூளை சேர்க்கவும்.

raw-banana-fry1

பின்னர் நன்கு வாழைக் காய்கள் உடையாமல் வேகும் அளவிற்கு பிரட்டி எடுக்க வேண்டும். எண்ணெயின் சூட்டிலேயே வாழைக்காய் 5 நிமிடத்தில் நன்கு வெந்து வரும். மசாலா கலவையுடன் சேர்த்து வெந்து வரும் பொழுது அட்டகாசமான சுவையில் புதுமையாக வாழைக்காய் வறுவல் தயாராகிவிடும். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சிம்பிளா ஈஸியா செய்யக் கூடிய இந்த வாழைக்காய் வறுவல் உங்கள் வீட்டில் நீங்களும் செய்து குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.