ஆஸ்திரேலிய மண்ணில் கோலிக்கு கிடைத்த ஆதரவு. அசந்து போன எதிர் அணி வீரர்கள்

virat
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (26-12-2018) துவங்கியது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற ஆக்கிரோஷமாக விளையாடும் என்று கருதப்படுகிறது.இந்நிலையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மைதானத்தில் கோஷமிட்டனர்.

koli 2

மெல்போர்ன் நாரில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்சல் மார்ஷ் பந்து வீச வரும்போது அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். அதே போன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய வரும் போது அவரை உற்சாக படுத்தும் வகையில் கோஷமிட்டனர். மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

- Advertisement -

marsh

இதற்கு முக்கிய காரணம் கடந்த இரண்டு போட்டியில் ஆடிய ஹாண்ட்ஸ்கோம்ப் இந்த போட்டியில் ஆடவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த கோஷத்திற்கும், ஹாண்ட்ஸ்கோம்ப்பிற்கும் தொடர்பு உள்ளது. மெல்போர்ன் மைதானம் விக்டோரியா என்கின்ற பகுதியில் உள்ளது. ஹாண்ட்ஸ்கோம்ப் விக்டோரியா நகரை சேர்ந்த ஆஸ்திரேலியா வீரர்.

comb

தனது சொந்த நகரத்தில் ஹாண்ட்ஸ்கோம்ப் விளையாடாதது அந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தினை அளித்தது. ஆகவே அவர்கள் ஹாண்ட்ஸ்கோம்ப்பிற்கு பதிலாக களமிறங்கிய வீரரான மார்ஷ் வரும்போது அவருக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி களமிறங்கும் போது அவருக்கு உற்சாக கோஷமிட்டு வரவேற்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -