இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு உறவு இருக்கத்தான் செய்யும். அது பெற்றவர்கள், கூட பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், கணவன் மனைவி என்ற எந்த உறவாக இருந்தாலும் ஏதாவது ஒரு உறவு கண்டிப்பாக இருக்கும். உறவுகள் அற்ற மனிதன் என்ற யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது. அதிலும் சிலர் மிகவும் நெருக்கமான உறவாக இருப்பார்கள். அந்த உறவில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டு கோபத்துடன் பிரிந்து சென்று விட்டால் அதனால் நம் மனம் உடைந்து விடும். அப்படிப்பட்ட சூழலில் அவர்களே நம்மை தேடி வந்து நம்மிடம் பேசுவதற்கு எந்த இலையை வைத்து பரிகாரம் செய்து எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேர பரிகாரம்
நாம் நம்மிடம் கோபம் கொண்டு பேசாமல் பிரிந்து சென்ற நபரை நம்மை தேடி வந்து பேசுவதற்கு கசப்பான ஒரு இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். கசப்பான இலை என்றதும் நம் நினைவிற்கு வருவது வேப்ப இலை தான். ஒரே ஒரு இலையை எடுத்துக்கொண்டு அதில் நம்மிடம் யார் வந்து பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களின் பெயரை கருப்பு நிற மை கொண்ட பேனாவால் எழுத வேண்டும். எழுதிய பிறகு அந்த வேப்பிலையை நம் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
மந்திரம் :
“ஓம் நமோ பால மோஹினி (அவர்களின் பெயர்) மமவசம் குரு குரு ஸ்வாஹா” என்று கூற வேண்டும். 108 முறை கூறிய பிறகு ஒரு கிண்ணத்தில் தேனை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த தேனில் நாம் பெயர் எழுதி வைத்திருக்கும் வேப்பிலையை சேர்க்க வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் திங்கட்கிழமை அன்றுதான் ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு வாரம் முடிந்த பிறகு நாம் கிண்ணத்தில் வைத்திருக்கும் தேனையும் வேப்பிலையையும் ஓடுகின்ற நீரில் சேர்த்து விட வேண்டும் . இவ்வாறு நாம் யார் பேச வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர்களின் பெயரை எழுதி அவர்களின் பெயரை அந்த மந்திரத்தில் உச்சரித்து பரிகாரத்தை செய்வதன் மூலம் அவர்களை விரைவில் நம்மை தேடி வந்து பேசுவார்கள்.
இந்த பரிகாரத்தை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தவறான உறவுகளுக்கு பயன்படுத்த வேண்டாம். இல்லை என்றால் அதில் வரும் பாதிப்பும் உங்களுக்கு தான் வந்து சேரும் என்பதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்.
இதையும் படிக்கலாமே :தெரியாமல் கூட கோவிலுக்கு இந்த பொருளை எடுத்துச் செல்லாதீர்கள்
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு விரைவிலேயே அவர்கள் விரும்பிய நபர் வந்து பேசுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்