உங்களின் நோய்கள், பணக்கஷ்டங்களை போக்கி விரும்பிய பலனை தரும் பரிகாரங்கள்

copper-coin

மனித இனத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பது நடைமுறை உண்மை. அப்படி உலகிற்கு நன்மை தருகின்ற செயல்களை செய்ய ஒவ்வொரு மனிதரும் ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் கொண்டிருக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. இத்தகைய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கு மருத்துவ காரணங்கள் தாண்டி கிரக தோஷங்கள் மற்றும் கர்ம வினைகளும் காரணமாக இருக்கின்றன. இவற்றால் ஏற்படுகின்ற ஆரோக்கிய குறைபாடுகளை போக்கி நன்மைகளை உண்டாக்கவல்ல சில பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

praying hand

உலகையே விலைக்கு வாங்கும் அளவிற்கு நம்மிடம் செல்வம் இருந்தாலும், தீராத வியாதிகள் நம்மை பீடித்து அவை உண்டாக்கிய பாதிப்புகளால் நாம் அவதிப்படும் பட்சத்தில், மிகுதியான செல்வங்கள் இருந்தாலும் நம்மால் மனரீதியான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத நிலையே இருக்கும். அதிலும் தீவிரமான உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்களால் அவதிப்படும் நபர்கள் மனரீதியாக மிகவும் சோர்ந்து விடுவார்கள். இத்தகைய மனிதர்களின் துன்பத்தைப் போக்கி அனைத்து இன்பங்களையும் நன்கு அனுபவிக்கும் படியான வாழ்க்கை ஏற்படுவதற்கு கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்வது நன்மையான பலன்களை தரும்.

மிகவும் கொடிய, நீண்ட நாட்களாக கஷ்டப்படுத்தும் வியாதிகளால் பீடிக்கப்பட்டிருக்கும் நபர்கள் இரவு உறங்குவதற்கு முன்பாக அவர்களின் தலையணை உறைகளுக்குள்ளாக இரண்டு செம்பு நாணயங்களை அவர்கள் அறியாமல் போட்டு வைத்து விடவேண்டும். மறுநாள் காலையில் எழுந்து அந்த இரண்டு செம்பு நாணயங்களை ஊருக்கு வெளியில் இருக்கின்ற இடுகாட்டில் தூர வீசி வேண்டும். இதனால் அந்த நபர்களின் பீடைகள், தோஷங்கள் போன்றவை நீங்கி மீண்டும் ஆரோக்கியமான உடல் நிலையைப் பெறுவதற்கு வழிவகுக்கும்.

dhristi lemon

ஒரு சில மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நோய்களின் பாதிப்பு மற்றும் இன்ன பிற காரணங்களால் அவ்வப்போது அவர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் அவர்கள் பெரும்பாலான நேரம் பதற்றமாகவும், அதிக கோபத்துடனும் காணப்படுவார்கள். இப்படி மனரீதியாக பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் சில பச்சை மிளகாய் மற்றும் ஒரு எலுமிச்சம் பழத்தை ஒரு சணல் கயிற்றில் கோர்த்து தங்கள் குடும்பத்தின் நபர் ஒருவரிடம் கொடுத்து, தங்களின் தலையை 7 முறை சுற்றி திஷ்டி கழிக்குமாறு செய்து, வீதியில் அந்த எலுமிச்சை பழம் மற்ற மிளகாய்களை போட்டு தீயிட்டு கொளுத்த வேண்டும். அவை முழுவதுமாக எரிவதை நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் பார்க்க வேண்டும். எலுமிச்சைப்பழம், மிளகாய்கள் நன்று எரிந்து கருகியதும், அந்த சாம்பலை ஓடும் நீரில் போட்டு கரைத்து விட வேண்டும். இது மனநிலை பாதிப்பு, உடல்நலக் குறைபாடு போன்றவைகளை போக்கி, ஆரோக்கியத்தை தருவதோடு, வீட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார கஷ்டங்களையும் நீக்கி செல்வ வளத்தை பெருக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் கையிலிருக்கும் மூன்றெழுத்து அர்த்தம் என்ன

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Remedies for diseases in Tamil. It is also called as Udal nalam pariharam in Tamil or Eliya pariharam in Tamil or Pana kastam theera in Tamil or Eliya pariharangal in Tamil.