எப்படிப்பட்ட நெஞ்சு சளியும் ஒரே நாளில் சரியாக இத மட்டும் 1 டம்ளர் குடித்து பாருங்க! நீண்டநாள் இருமல் கூட ஒரே நாளில் சரியாகக் கூடிய சக்தி இந்த கசாயத்துக்கு உண்டு.

- Advertisement -

நெஞ்சு சளியால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலருக்கு காலநிலை கொஞ்சம் மாறினாலும் கூட சளி பிடித்துக் கொள்ளும். இருமல் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக இரவு படுத்தால் வாய் ஓயாமல் இருமல் வந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் தூக்கம் கெட்டு போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுக்கும் நெஞ்சுச் சளியும் இருமலும் ஒரே நாளில் நீங்கி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுவும் இயற்கையான வைத்தியத்தால்! அந்த இயற்கை வைத்தியத்தை தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ginger - Inji

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 1/2 டம்ளர் அளவு நல்ல தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். வெற்றிலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் காம்பை கில்லி தூரம் போட்டு விடுங்கள். வெற்றிலையை உங்கள் கைகளாலேயே சிறு சிறு துண்டுகளாக கிழித்து தண்ணீரில் போட்டு விட வேண்டும். இஞ்சி சிறிய துண்டு, மிளகு 15 லிருந்து 20, சீரகம் 1/2 ஸ்பூன் இந்த மூன்று பொருட்களையும் சிறிய உரலில் போட்டு தனித்தனியாக நசுக்கி தண்ணீரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இறுதியாக 1/2 ஸ்பூன் அளவு வர மல்லித்தூள், அதாவது கொத்தமல்லித்தூளை இந்த தண்ணீரோடு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். கடையிலிருந்து வாங்கிய கொத்தமல்லி தூள் சேர்க்க வேண்டாம். வீட்டில் அரைத்த கொத்தமல்லி தூள் சேர்ப்பது மிகவும் நல்லது.

Milagu

முதலில் இந்த கஷாயத்திற்காக ஊற்றிய 1 1/2 டம்ளர் தண்ணீரானது மிதமான தீயில் 3/4 டம்ளர் தண்ணீராக சுண்ட வேண்டும். அதாவது பாதி அளவு தண்ணீர் சுண்டி விட வேண்டும். அப்போது தான் நாம் போட்ட பொருட்களின் சாறு அந்த தண்ணீரில் முழுமையாக இறங்கி இருக்கும்.

- Advertisement -

இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு, இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி, கொஞ்சம் சூடு இருக்கும்போதே குடித்து விட வேண்டியது தான். காலை வெறும் வயிற்றில் இதை குடித்தால் மாலை மலம் கழிக்கும் போது, நெஞ்சு சளி அனைத்துமே வெளியேறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்துவிட்டு தூங்கினால், காலையில் மலம் கழிக்கும் போது சளி அனைத்தும் வெளியேறிவிடும்.

பெரியவர்களாக இருந்தால் இந்தத் தண்ணீரை அப்படியே குடித்து விடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு இதன் அளவில் பாதியை குறைத்து கொடுக்கலாம். 1/4 டம்ளர் அளவு கொடுக்கலாம். மிகச்சிறிய குழந்தைகளாக இருந்தால் சங்கடையில் 2 சங்கடை ஊற்றி விடுங்கள். மூன்று வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தை தாராளமாகக் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் நெஞ்சில் இருக்கும் சளி தானாக கரைவதற்கு இதை விட சுலபமான ஒரு கை வைத்தியம் இருக்கவே முடியாது.

- Advertisement -