ரெஸ்டாரன்ட் ஸ்டைல் யம்மியான ரவா கிச்சடி 10 நிமிஷத்துல இப்படி செஞ்சா கண்டிப்பா வாயில் எச்சில் ஊறும் பாத்துக்கோங்க!

rava-kichadi
- Advertisement -

ரவையில் ரவா உப்புமா கூட ஈஸியாக செய்து விடலாம். ஆனால் இந்த கிச்சடி செய்வது என்பது பெரும் சோதனையாக இருக்கும். காய்கறிகளை எல்லாம் சேர்த்து செய்யும் இந்த ரவா கிச்சடி வாயில் வைத்தவுடன் அப்படியே கரைந்து விட்டால் எப்படி இருக்கும்? ரவா உப்புமா என்றாலே பலருக்கும் ஒவ்வாமை தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனை செய்து கொடுத்தாலே முகம் சுளிப்பார்கள். கொஞ்சம் வித்தியாசமாக காய்கறிகள் சேர்த்து கிச்சடி போல் செய்து கொடுத்தால் அமைதியாக சாப்பிட்டு விடுவார்கள். அப்படியான ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் டேஸ்டியான ரவா கிச்சடி நம் வீட்டு கிச்சனிலும் எப்படி செய்யலாம்? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

idli-rava

ரவா கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
நெய் – 50ml, ரவா – 1 கப், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 1, சோம்பு – கால் டீஸ்பூன், பூண்டு பல் – 4, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – 2, பீன்ஸ், கேரட், பட்டாணி – ஒரு கப், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், தண்ணீர் – 3 கப், பால் – 50 ml, கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

ரவா கிச்சடி செய்முறை விளக்கம்:
ரவா கிச்சடி செய்ய முதலில் ஒரு கப் ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரவை ஆனது மிகவும் நைசாக இல்லாமல் இருந்தால் கிச்சடி செய்ய நன்றாக இருக்கும். அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனில் நெய் ஊற்றி அதில் ரவையைப் போட்டு ஐந்து நிமிடம் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மற்றொரு பேனை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு ஆகியவற்றை சேர்த்து பொரிய விடுங்கள்.

Kichadi recipe Tamil

மசாலா பொருட்கள் பொரிந்ததும் அதில் பூண்டு பற்களை தோலுரித்து அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கருவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைத் பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசம் போக வதக்குங்கள். பின்னர் தக்காளி மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மைய வதங்கி வரும் சமயத்தில் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகிய காய்கறிகளை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

இவை பாதி அளவிற்கு வெந்து வந்ததும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். மிளகாய் தூள் அதிகமாக சேர்த்தால் நிறம் மாறிவிடும் எனவே கால் டீஸ்பூனிற்கும் குறைவாக கொஞ்சமாக சேர்த்துக் கொண்டால் போதும். ஒரு கப் ரவைக்கு மூன்று கப் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போது தான் ரவை நன்கு திரண்டு சூப்பராக வரும். தண்ணீர் கொதித்ததும் 50ml அளவிற்கு பால் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் கிச்சடியின் சுவை ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சூப்பராக இருக்கும்.

Kichadi recipe Tamil

பின்னர் உப்பை சரி பார்த்து தேவையான அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நெய்யில் வறுத்து வைத்த ரவையை சேர்த்து கிண்டி கொண்டே இருங்கள். தண்ணீர் எல்லாம் உறிஞ்சியதும் கிச்சடி பொலபொலவென்று வெந்து வந்திருக்கும். இந்த சமயத்தில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, பொடி பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து பிரட்டி இறக்கி சுடச்சுட பரிமாற வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சுலபமா கிடைக்கக்கூடிய பொருட்களை ஸ்டார் ஓட்டல்களில் கிடைக்கும் ரவா கிச்சடி போல நம் வீட்டிலேயே செய்து விடலாம். நீங்களும் இதே முறையில் ஒரு முறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -