முகம் பளிச்சிட உதவும் அரிசி மாவு

rice flour face
- Advertisement -

முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை உற்பத்தியானால் முகம் ஒருவித சோர்வோடு இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் முகத்தில் அதிகப்படியான பருக்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த எண்ணெய் பசையை நீக்கினாலேயே முகம் பளிச்சென்று மாறிவிடும். இதை நீக்குவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி முகத்தை பளிச்சென்று பிரகாசமாக மாற்றுவதற்கு அரிசி மாவை வைத்து எந்த முறையில் ஃபேஷியல் செய்ய வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

வீட்டில் இருக்கக்கூடிய அரிசி மாவை நாம் நம்முடைய முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் நீங்கும். எண்ணெய் பசை குறையும். பருக்கள் நீங்கும். பருக்களால் ஏற்பட்ட வடுக்களும் மறையும். இதோடு மட்டுமல்லாமல் நம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி இளமையான பிரகாசமான முகத்தை பெற முடியும். அப்படிப்பட்ட முகத்தை பெறுவதற்கு அரிசி மாவை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பேசியலை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

முதலில் முகத்தில் ஏதாவது மேக்கப், பவுடர், கிரீம் என்று இருந்தால் அதை சுத்தமான தண்ணீரை பயன்படுத்தி நீக்கி விட வேண்டும். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்ச்சாத பசும்பாலை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களும் பிளாக் கேட்ஸ் வைட் கேட்ஸ் என்று சொல்லக்கூடியவையும் நீங்கும். பிறகு இதை சாதாரண தண்ணீரை பயன்படுத்தி கழுவிக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பேஸ் பேக்கை பற்றி பார்ப்போம். இதற்கு ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு, ஒரு ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அரை ஸ்பூன் அளவிற்கு வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு காபி துளை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதை பேஸ்டாக தயார் செய்வதற்கு பன்னீர் அல்லது பசும்பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி தயார் செய்த இந்த பேஸ் பேக்கை உங்களுடைய முகத்தில் நீங்கள் நன்றாக தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அதை அப்படியே இருபது நிமிடத்திற்கு விட்டுவிடுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவுங்கள். அவ்வளவுதான் பேசியல் முடிந்து விட்டது. இந்த முறையில் வாரத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ தொடர்ச்சியாக நாம் செய்து வர நம் சருமத்தின் நிறம் அதிகரித்து, எண்ணெய் பசை குறைந்து, பளபளப்பான மிருதுவான பட்டு போன்ற சருமத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: பட்டுப் போன்ற கூந்தலை பெற உதவும் வெண்டைக்காய்
பியூட்டி பார்லர் சென்று ஃபேஷியல் செய்வதற்கு பதிலாக வீட்டில் இருக்கக்கூடிய அரிசி மாவை பயன்படுத்தி வீட்டிலேயே எளிமையான செலவு மிகவும் குறைவான ஃபேஷியலை நம்மால் செய்ய முடியும்.

- Advertisement -