ரஸ்க் சாப்பிடுவது போல ரிஸ்க் எடுக்கும் 3 ராசிக்காரர்கள். நீங்கள் எடுக்கும் ஆபத்தான முடிவுகளின் பலன்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

rasi
- Advertisement -

12 ராசிக்காரர்களுக்கும் என்று தனித்தனி குணாதிசயங்கள் இருக்கின்றன. அவற்றை ஜாதகத்தின் மூலம் எளிதில் கணிக்க முடியும். அவ்வாறு ஒருவர் தங்கள் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல அவசியம் தேவைப்படுவது தைரியம். எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையாக இருந்தாலும் அதனை சமாளிப்பதற்கும், சரி செய்வதற்கும் மன தைரியமும், தெளிவான சிந்தனையும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைகள் வருகின்ற பொழுதும் இந்த 3 ராசிக்காரர்கள் மட்டும் துணிந்து தைரியமாக முடிவெடுப்பார்கள். அவ்வாறு அவர்கள் எடுக்கும் இந்த அவசர முடிவுகளினால் உண்டாகும் பலன்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bold

ஆபத்துகளை கண்டு பயப்படாத ராசிகள்:
ஒரு சிலர் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளைக் கூட சமாளிக்க முடியாமல் மிகவும் பயந்து மன சோர்வுற்று எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க முடியாமல் குழப்ப நிலையிலேயே இருந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அதே சமயம் ஒரு சிலர் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் சட்டென்று தெளிவான முடிவினை எடுத்து விடுவார்கள். இதனால் என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதனை பிறகு சமாளித்து கொள்ளலாம் என்ற மன தைரியம் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

- Advertisement -

இவ்வாறு தைரியமாக முடிவெடுத்து பிரச்சினைகளை சமாளிக்கும் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டாலும் அதிலிருந்து எளிதில் வெளிவந்து தனது இலக்கை நோக்கி தெளிவாக சிந்தித்து பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி மன தைரியத்துடன் இருக்கும். இயல்பாகவே இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த வித இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதனைக் கண்டு துவண்டுவிடாமல் அந்த சூழ்நிலையை எளிதாக சமாளித்து சரி செய்யும் தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

mesham

மேஷம் ராசி:
மேஷம் ராசிகாரர்கள் எப்பொழுதும் ஆளுமை குணமுடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரங்களிலும் கூட தயங்காமல் முடிவுகளை எடுப்பார்கள். அவர்கள் எடுக்கப் போகும் இந்த முடிவினால் வரப்போகும் ஆபத்துகளைப் பற்றியெல்லாம் அவர்கள் பயப்பட மாட்டார்கள்.

- Advertisement -

பல நேரங்களில் மேஷ ராசிக்காரர்கள் எடுக்கும் முடிவினை பார்க்கும் பொழுது அனைவருக்கும் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தங்கள் வாழ்வில் பல சூழ்நிலைகளை தைரியமாக சமாளிப்பதால் தான் ஆளுமைத் திறன் கொண்டவர்களாகவும், தலைமைத்துவம் பெற்கறவர்களாகவும் அதிக நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.பல தடைகளை மீறி அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடனும் மேஷ ராசிக்காரர் தான்.

rishabam

ரிஷபம் ராசி:
எப்போதும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்கும் ரிஷப ராசிக்காரர்கள் எந்த ஒரு ஆபத்துகளை கண்டும் பயப்படாதவர்கள். அவர்கள் எடுக்கும் வேலையை ஒரே முயற்சியில் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். அதற்கு எந்தத் தடைகள் வந்தபோதும் அவற்றை சரி செய்ய தைரியமாக, தெளிவாக முடிவு எடுக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

எந்த ஒரு வேலையிலும் கடினமாக உழைக்கும் இவர்கள் அவர்களுக்கு வரும் சவால்களை நேரடியாக ஏற்றுக் கொள்வார்கள். ஒரு பெண்ணாக பல தடைகளை மீறி இப்போது முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி அவர்களும் ரிஷப ராசிக்காரர் தான்.

simmam

சிம்மம் ராசி:
சிம்ம ராசிக்காரர்கள் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அதனை கண்டு பயப்படாமல் சிங்கம் போன்று தைரியமாக சமாளிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலைகள் வந்த பொழுதும் அவற்றிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்று தெளிவாக யோசித்து முடிவெடுப்பார்கள். தங்களுக்கு இருக்கும் துன்பத்தையும் வெளிக்காட்டாமல் முகத்தில் சிரிப்புடன் இருக்கும் தைரியசாலிகள்.

ஆளுமை திறன் மிக்கவர்களாக இருக்கும் இவர்கள் பல ஆபத்தான விஷயங்களைத் தைரியமாக மேற்கொண்டு அதிலிருந்து அனுபவத்தை கற்றுக் கொள்வார்கள். இப்பொழுது மகாராஷ்டிர முதல்வராக இருப்பவர் தான் இருக்கும் கட்சியில் இருந்து வெளிவரும் தைரியமான முடிவினை எடுத்த பின்னரே இப்பொழுது முதல்வராகி இருக்கிறார். இவரும் சிம்ம ராசிக்காரர் தான்.

- Advertisement -