ரோட்டோர ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி இப்படித்தான் செய்யணுமா? இவ்வளவு ருசியான சட்னியை சுலபமாக எப்படி செய்வது?

- Advertisement -

எளிதாக செய்யும் இந்த தேங்காய் சட்னியில் விதவிதமான வகைகளும் உண்டு. அதில் ரோட்டோரமாக இருக்கும் சாதாரண ஹோட்டல்களில் கொடுக்கும் தேங்காய் சட்னி வித்தியாசமான சுவையுடன் மட்டுமல்லாமல், வித்தியாசமான நிறமுடனும் இருக்கும். இதற்கு என்ன காரணம்? ரொம்ப ரொம்ப சுவையாக சூப்பரான முறையில் ஹோட்டல் சுவையில் எப்படி தேங்காய் சட்னியை அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – ஒன்று, வரமிளகாய் – 3, உடைத்த கடலை – நான்கு டேபிள் ஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு, கருவேப்பிலை – இரண்டு கொத்து, உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
தேங்காய் அரை மூடி அளவிற்கு முதலில் துருவி எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் சட்னி அரைப்பதற்கு நன்கு முற்றிய தேங்காயாக இருப்பது சரியாக இருக்கும், இளம் தேங்காய் இருந்தால் சட்னி சுவைக்காது. ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதனுடன் காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய் மற்றும் மூன்று வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். சில மிளகாய் அதிக காரமாக இருக்கும் எனவே உங்கள் காரத்திற்கு ஏற்ப இதை கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.

பின்னர் நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு உடைத்த கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். பொட்டுக்கடலை பாதி உடைந்தது போல் அல்லாமல் முழுமையாக இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். பின்னர் இதனுடன் ஒரு துண்டு இஞ்சி அதாவது 2 இன்ச் அளவிற்கு இஞ்சி இருந்தால் தோல் நீக்கி பொடியாக நறுக்கி சேருங்கள். தேங்காய் சட்னியின் சுவையை அதிகரிக்க இரண்டு கொத்து கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்து உருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த தேங்காய் சட்னியுடன் ஒரு சிறு தாளிப்பு கொடுத்துக் கொள்ளுங்கள். இதற்காக அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.

சீரகம் சேர்த்து தாளித்ததும் ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து படபடவென பொரிய ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து தேங்காய் சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான், ரொம்பவே சூப்பரான இந்த தேங்காய் சட்னி ரோட்டோர ஹோட்டல்களில் இருக்கும் சுவையைப் போலவே சூப்பராக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க!

- Advertisement -