3 முக்கியமான சீக்ரெட் டிப்ஸ்களுடன் ரோட்டு கடை ப்ளைன் சால்னா! வீட்டிலேயே ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க. செய்யும் போதே நாக்கில் எச்சில் ஊறுவதை யாராலும் தடுக்க முடியாது.

salna
- Advertisement -

தற்போது ரோட்டுக் கடையில் விற்கும் பரோட்டா சால்னாவை நம்மில் பலபேர் மிஸ் பண்ணிட்டு இருக்கோம். உங்க வீட்டில ஒருமுறை சிம்பிளா சால்னாவை இப்படி ட்ரை பண்ணி பாருங்க. அசைவ பிரியர்களுக்கும் இந்த சால்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துருவல் – 1/2 மூடி, சோம்பு – 1 ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 15, கசகசா – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல அரைத்து ஒரு பக்கமாக வைத்துக் கொள்ளுங்கள் இது அப்படியே இருக்கட்டும்.

white-kuruma1

ஒரு சிறிய பௌலில் 1 – டேபிள்ஸ்பூன் அளவு கடலை மாவு போட்டு 50ml தண்ணீர் விட்டு கட்டி படாமல் கலக்கி இதையும் அப்படியே ஒரு ஓரமாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து விடுங்கள். எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்ற வேண்டும். இதில் லவங்கம் – 3, ஏலக்காய் – 3, பட்டை – 3, பிரியாணி இலை – 2, அன்னாசிப்பூ – 1, இந்த மசாலா பொருட்களை தாளிக்க வேண்டும். அடுத்தபடியாக மீடியம் சைஸ் 2 பெரிய வெங்காயங்களை நீளவாக்கில் வெட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

salna1

வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிய பின்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் சேர்த்து இஞ்சி பூண்டின் பச்சை வாடை நீங்கியவுடன், பச்சை மிளகாய் – 3 கீனியது, கருவேப்பிலை – ஒரு கொத்து, புதினா – 3 கொத்து, கொத்தமல்லி தழை – 1/2 கைப்பிடி அளவு சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக மீடியம் சைஸ் – 2 தக்காளி பழங்களை பொடியாக வெட்டி சேர்த்து தக்காளி தொக்கு ஆகும் வரை நன்றாக வதக்கி விடுங்கள். இறுதியாக மிளகாய்த்தூள் 2 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1 ஸ்பூன், சால்னாவுக்கு தேவையான அளவு உப்பு, இந்த மசாலா பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும்.

salna

இப்போது 1 டம்ளர் அளவு தண்ணீரை கடாயில் ஊற்றி கொள்ளுங்கள். மசாலா பொருட்கள் அனைத்தும் இந்த தண்ணீரில் ஒரு நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாடை நீங்கியவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

kadalai-maavu

அடுத்தபடியாக கலந்து வைத்திருக்கும் கடலை மாவையும் இதில் ஊற்றி விடுங்கள். இப்போது மொத்தமாக 4 பெரிய டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி விட வேண்டும். நன்றாக கலந்து விட்டு, உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஒரு மூடியைப் போட்டு 20 நிமிடங்கள் இந்த சால்னாவை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

salna2

இந்த சால்னா தண்ணியாகவும் இருக்கக்கூடாது. கெட்டியாகவும் இருக்கக் கூடாது. ரோட்டுக் கடையில் பார்த்திருப்போம் அல்லவா அந்த பக்கத்திற்கு வர வேண்டும். மூடி போட்டு கொதித்து கொண்டிருக்கும் சால்னாவை, மூடியை திறந்தால், இதனுடைய வாசம் உங்களது பசியை தூண்டும். கொத்தமல்லி தழைகளைத் தூவி சூடாக இதை பரிமாறி பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும்.

salna3

தேவைப்பட்டால், இந்த சால்னாவில் தேங்காய் விழுது, கடலை மாவு ஊற்றிய பின்பு, 1/2 ஸ்பூன் சிக்கன் மசாலாவை சேர்த்துக் கொண்டீர்கள் என்றால் அசைவ பிரியர்கள் விரும்பும்படியான சால்னா தயார். இந்த டேஸ்டில் அசைவ குருமா தோத்தது போகும். (இந்த சால்னா வில் கட்டாயமாக புதினா சேர்க்கவேண்டும். கடலைமாவு சேர்க்கவேண்டும். சிம்மில், குருமா 20 லிருந்து 30 நிமிடங்கள் கொதிக்க வேண்டும்.) உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -