ராபர்ட் கிளைவ் வாழ்வில் பெருமாள் நிகழ்த்திய அதிசயம்- உண்மை சம்பவம்

Perumal-and-robert-clive

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த சமயத்தில் ஒருமுறை ராபர்ட் கிளைவ் ஆற்காடு நோக்கி பெரும் படையோடு சென்றார். அப்போது அவருக்கு வழியில் திடீர் என்று ஒரு பெரும் உடல் உபாதை ஏற்பட்டது. இதனால் தன்னுடைய பயணத்தை நிறுத்திவிட்டு காஞ்சிபுரத்தில் தங்கினார்.

British

என்னடா இது, திடீர் என உடல் சரி இல்லாமல் போய்விட்டதே இப்போது ஆற்காடு வரை எப்படி செல்வது. ஆனால் நாம் அங்கு சென்றாக வேண்டுமே என்ன செய்வது என்று பெரும் சிந்தனையில் இருந்தார் ராபர்ட் கிளைவ். அப்போது அங்கு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் திருத் தேர் உற்சவம் நடைபெற்றது. அதை கண்ட ராபர்ட் கிளைவ், இது என்ன விஷேஷம் என்று தன்னுடைய உதவியாளரை அனுப்பி விசாரித்து வர சொன்னார்.

விரதராஜ பெருமாளின் மகிமையை பற்றி அறிந்துவந்த உதவியாளர், அது பற்றி ராபர்ட் கிளைவிடம் தெளிவாக எடுத்துரைத்தார். உடனே ராபர்ட் கிளைவ், வரதராஜ பெருமாளை தரிசிக்க சென்றார். அப்போது தன்னுடைய உடல் உபாதை விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டினார். மறுநாளே ராபர்ட் கிளைவிற்கு நோய் நீங்கியது. அவர் தன் படையோடு ஆற்காடு சென்று வேலையே முடித்து மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.

perumal

வரும் வழியில் வரதராஜ பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மரகத மாலை ஒன்றை அவருக்கு காணிக்கையாக செலுத்தினர். அப்போது பெருமாளுக்கு அர்ச்சகர் சாமரம் வீசுவதை கண்ட ராபர்ட் கிளைவ், பெருமாளுக்கு ஏன் விசுருக்கிறீர், பெருமாளுக்கு வியர்க்குமா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அர்ச்சகர், இந்த பெருமாள் யாக குண்டத்தில் இருந்து பிறந்தவர் ஆகையால் அவருக்கு எப்போதும் வியர்க்கும் என்றார். அதோடு நிற்காமல் ஒரு துணியை எடுத்து பெருமாளின் நெற்றியில் ஒற்றி எடுத்தார். அந்த துணி ஈரமாக இருந்தது. இதை கண்ட ராபர்ட் கிளைவ் ஆச்சரியப்பட்டார்.

- Advertisement -

perumal

இதுவும் படிக்கலாமே:
தன் ரத்தத்தையே எண்ணையாக ஊற்றி விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்

ஜாதி, மதம், பேதம் எல்லாம் பரந்தாமனுக்கு இல்லை. எந்த தேசத்தில் உள்ளோரும் பரந்தாமனை வேண்டினால் அவர் நிச்சயம் காத்தருள்வார் என்பதற்கு சான்றாக விளங்குகிறது இந்த நிகழ்வு.

ஆன்மீக கதைகள், மந்திரங்கள் மற்றும் ஜோதிடம் சம்மந்தமான தகவல்களுக்கு தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.