ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருக இதை செய்யுங்கள்

chandra

பௌர்ணமி தினத்தில் இரவு நேரத்தில் வானில் ஒளிவீசும் சந்திரனின் அழகில் கவரப்படாதவர்கள் எவருமே இல்லை எனக் கூறலாம். இரவில் சந்திரனை காணும் போது நம்மை அறியாமல் நமது மனதில் ஒருவித மகிழ்ச்சி, உற்சாகம் ஏற்படுகிறது. எனவே தான் சந்திரனை நமது முன்னோர்கள் மனோகாரகன் என அழைத்தனர். நமது புராணத்தில் விண்ணில் இருக்கின்ற 27 நட்சத்திரங்களையும் சந்திர பகவான் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில் சந்திரன் மிகவும் பிரியத்தோடு இருந்த நட்சத்திரம் “ரோகிணி நட்சத்திரம்” ஆகும். இந்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் மேன்மையான பலன்களை பெறுவதற்கான பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

27 நட்சத்திரங்களில் நான்காவதாக வரும் நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் ஆகும். நவகிரகங்களில் சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாக இந்த ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. சஇந்த நட்சத்திரத்தின் அதி தேவதையாக “பிரம்ம தேவன்” இருக்கிறார். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது சிறப்பானதாகும்.

வருடத்திற்கு ஒருமுறை நவகிரகங்களில் சந்திர பகவானுக்குரிய திருக்கோயில்களான திங்களூர், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் போன்றவற்றிற்கு சென்று வழிபட வேண்டும். எந்த ஒரு புதிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் பெற்ற தாயாரையும், தாய் வழி முன்னோர்களையும் வழிபட்டு தொடங்குவது சிறந்த வெற்றிகளைத் தரும். கோடைக்காலங்களில் மற்றும் கோவில் விழாக்களில் மக்களின் தாகத்தைத் தணிக்க மோர் பந்தல் அமைத்து, மோர் தானம் வழங்குவது நல்லது. மேலும் வீட்டிற்கு வெளியே பசுக்கள், நாய்கள் போன்றவை தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நீர் தொட்டி அமைத்து, அதில் எப்போதும் நீர் ஊற்றி வைத்தது சிறப்பான பலன்களைத் தரும்.

elumalayaan

ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தலவிருட்சமாக நாவல் பழ மரம் இருக்கிறது. நாவல் மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று நாவல் பழமரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது ரோகிணி நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை நீக்கும். மன நோயாளிகளுக்கு உணவு, ஆடை தானங்கள் போன்றவற்றை செய்வது சந்திர பகவானின் அருளாசி களைத் தரும் பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
திருமணம் சீக்கிரம் நடைபெற பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rohini nakshatra dosha pariharam in Tamil. It is also called as Rohini natchathiram in Tamil or Rohini natchathira athipathi in Tamil or Chandra bhagavan nakshatras in Tamil or Rohini natchathiram in Tamil.