இதுதான் எங்கள் முடிவு. ஹாமில்டன் மூன்றாவது டி20 போட்டிக்கான அணியில் மாற்றங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு – ரோஹித் திட்டவட்டம்

rohith-sad

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Team

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.

இந்நிலையில் அடுத்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரோஹித் : முதல் போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக இந்திய அணியின் தேர்வை சிலர் விமர்சித்தனர். ஆனால், அணியில் மாற்றங்களை செய்யாமல் அவர்களின் மீது நம்பிக்கை வைத்து அதே அணியுடன் களமிறங்கி இரண்டாவது போட்டியில் சிறப்பான வெற்றியையும் பெற்றோம்.

Team

எனவே, இதுதான் எங்களின் தெளிவான மற்றும் தீர்க்கமான முடிவு. நாங்கள் அதே அணியுடன் கடைசி போட்டியில் பங்கேற்று தொடரை வெல்வோம் என்று ரோஹித் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி குறித்து பாண்டியா சகோதரர்கள் – ட்வீட்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்