உங்க வீட்டு ரோஜா செடியில் மட்டும், எப்படி இவ்வளவு அழகா பூ பூக்குது! என்று மத்தவங்க கேக்குற அளவுக்கு, கொத்துக்கொத்தா அவ்வளவு பூ பூக்கும். ஒரு டம்ளர் இந்த தண்ணீர் ஊற்றினால்!

Rose Plant
- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடியானது புதியதாக துளிர் வைத்தால், அந்த ரோஜா கிளையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மொட்டுகள் வைக்க என்ன செய்ய வேண்டும்? அது மட்டும் இல்லைங்க, புதுசா விட்டற துளிரில், மொட்டு வைக்காமல் இருக்கவே இருக்காது. உங்க வீட்டில இருக்கிற செடியோட கிளைகளில் எல்லாம், பூக்கள் பூத்துக் குலுங்கினால் எவ்வளவு அழகாக இருக்கும். உங்க வீட்டு செடிக்கு நீங்க என்ன உரம் போன்றீங்க? இவ்வளவு அழகா பூ பூக்குது! அப்படின்னு மத்தவங்க கேக்குற அளவுக்கு, உங்க செடியில் பூ பூக்க என்ன செய்யலாம்? இந்த ஊட்டச்சத்து தண்ணீரை ஊற்றினாலே போதும். இந்த தண்ணீரை எப்படி தயார் செய்வது என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

rose

உங்கள் வீட்டில் இருக்கும் காய்கறி செடிகளுக்கும் இந்த தண்ணீரை ஊற்றினால் அதிகப்படியான காய் காய்க்கும். இந்த தண்ணீரை தயார்செய்ய காசு கொடுத்து எந்த ஒரு பொருளையும் வாங்க தேவையில்லை. உங்கள் வீட்டில் சமையலுக்காக பயன்படுத்திவிட்டு, வீணாக தூக்கிப்போடும் கழிவுகளை வைத்து தயாரித்து விடலாம்.

- Advertisement -

முதலில் இதற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொள்வோம். காலையில் டீ போட்டு வடிகட்டிய, அந்த டீ திப்பியை குப்பையில் போட வச்சுருப்பீங்க. டீ போட்டு, வடிகட்டிய டீ தூள் 5 ஸ்பூன், 4 வெங்காயதை வெட்டிய தோல், வேப்பிலை 2 கொத்து, வேக வைக்காத முட்டை தோல் 4, முட்டை சாப்பிடாதவர்கள் முட்டை தோலை பயன்படுத்த வேண்டாம். அதற்கு இணையான சக்தி வாழைப்பழத் தோலில் உள்ளது. வாழைப்பழத் தோலை சிறு துண்டுகளாக வெட்டி இதில் சேர்த்துக்கொள்ளலாம். அரிசி கழுவிய தண்ணீர். மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் அத்தியாவசியமாக போடவேண்டிய பொருட்கள். இதுதவிர பீட்ரூட் தோல், எலுமிச்சை தோல், கேரட் தோல், இப்படி காய்கறி கழிவுகள் தோல் இருந்தாலும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

Roja chedi

முதலில் டீத்தூள் திப்பியில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி, நன்றாக ஊறவைத்து விடுங்கள். அந்த தண்ணீரானது டீ போன்று மாறிவிடும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் வெங்காயத் தோல், முட்டை தோல், வேப்பிலை மற்றும் காய்கறி கழிவுகள் இருந்தால் அதையும் அந்த தண்ணீரில் போட்டு, 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்பு, அந்தத் தண்ணீரை, கீழே இறக்கி 4 மணி நேரம் ஆற வைக்க வேண்டும். நான்கு மணி நேரம் எதற்காக என்றால், அந்த சத்துக்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி விடும்.

- Advertisement -

இறுதியாக காய்கறி கழிவுகளில் இருந்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்ந தண்ணீருடன், அரிசி கழுவிய தண்ணீரையும், டீ தூளில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து இருக்கின்றோம் அல்லவா? டீ தூள் கலந்த அந்த தண்ணீரையும் இதில் சேர்த்து விட வேண்டும். எல்லா கலவையும் சேர்ந்த தண்ணீராக இப்போது ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீர் தயாராகிவிட்டது.

Roja chedi

இந்தத் தண்ணீரை ஒரு டம்ளர் அளவு உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு ஊற்றினால் போதும். வாரம் ஒரு முறை இந்த தண்ணீரை ஊற்றும் பட்சத்தில், உங்களது செடி ஊட்டச் சத்தோடு வளர்ந்து ஒரு சின்ன கிளையில் கூட நிறைய பூ பூப்பதை நம்மால் காண முடியும்.

Roja chedi

உங்கள் வீட்டில் அரிசி கழுவிய தண்ணீரை, நேரடியாக செடிக்கு ஊற்றலாம். கழுவிய தண்ணீரை தான் ஊற்றவேண்டும். வடித்த கஞ்சி தண்ணீர் கிடையாது. டீ தூள் திப்பியில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, அந்தத் திப்பியோடு சேர்த்து, அந்த தண்ணீரையும் செடிகளுக்கு ஊற்றலாம். வாழைப்பழத் தோலை மட்டும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஊற்றலாம். இப்படி உங்கள் வீட்டில் சமையலுக்காக பயன்படுத்தும் காய்கறி கழிவுகளை, தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து ஊற்றும்போது செடிகள் ஊட்டச் சத்தோடு வளரும் எக்காரணத்தைக் கொண்டும் சமைத்த உணவை செடிகளுக்கு போட்டு விட வேண்டாம். இப்படியான இயற்கை உரங்களை உங்கள் வீட்டில் இருக்கும் பூச்செடிகளுக்கும், காய் செடிகளுக்கும் ஊற்றினாலே போதும். அதிகப்படியான பூப்பூக்கும். அதிகப்படியான காய் காய்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும் ஆரோக்கியமான முறையில் பூக்களும் காய்களும் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -