உங்க வீட்டுல, நிறைய செடி வச்சிருக்கீங்களா? அப்ப உங்களுக்கான டிப்ஸ் தான் இது! குறிப்பா, உங்க வீட்டு ரோஜா செடியில் நிறைய பூ பூகணும்னா இத தெரிஞ்சுக்கோங்க!

rose-onion
- Advertisement -

நாம் வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் வெங்காயத்திலிருந்து உரிக்கும் தோலை, ரோஜா செடிகளுக்கும், மற்ற பூச்செடிகளுக்கும், மற்ற காய்கறி செடிகளுக்கும், உரமாக போட்டாலே போதும். பூச்செடிகளாக இருந்தால், நிறைய பூ பூக்கும். காய்கறி செடிகளாக இருந்தால், காய்கள் ஆரோக்கியமான முறையில், இயற்கையாகவே, பெரியதாக காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்காயத் தோலை எப்படி உரமாக மாற்றி செடிகளுக்கு போடுவது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Roja chedi

5 வெங்காயத்தை உரித்த தோலாக இருந்தால், அதற்கு ஒரு லிட்டர் தண்ணீர் போதும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக்கொண்டு, அதில் வெங்காயத் தோலை போட்டு, 1 லிட்டர் தண்ணீரையும் ஊற்றி, அந்த டப்பாவை மூடி வைத்துவிடுங்கள்.

- Advertisement -

ஒருநாள் அப்படியே அந்த வெங்காயத் தோலில், தண்ணீரில் ஊறட்டும். அதாவது 24 மணி நேரம் ஊறினால் போதும். மறுநாள் வெங்காய தோலிலிருந்து, தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து, உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா செடிகளுக்கும் 1/2 கப் அளவு இந்த வெங்காய தண்ணீரை, வேர் சுற்றி ஊற்றினாலே போதும். வாரத்திற்கு ஒரு முறை இப்படி ஊற்றி பாருங்கள்.

உங்களது செடி ஆரோக்கியமாக செழிப்பாக வளரும். பூச்செடிகளில் நிறைய பூ பூக்கும். காய்கறி செடிகளாக இருந்தால் செழுமையான வளர்ச்சி அடைந்து செழுமையான காய்களை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பூச்செடிகள், காய் செடிகள், இவைகளைத் தவிர்த்து உங்கள் வீட்டில் அழகுக்காக எந்த செடிகளை வைத்து இருந்தாலும், அதற்கும் இந்த தண்ணீரை ஊற்றினால் மிகவும் நல்லது.

- Advertisement -

கடையில் காசு கொடுத்து வாங்கும் உரத்தை விட, இந்த வெங்காய தோலில் அதிகப்படியான சக்தி உள்ளது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், அயன் மற்றும் காப்பர் போன்ற அதிகப்படியான சத்துக்கள் அடங்கி இருக்கும் இந்த வெங்காயத்தை தோலை இனி எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் வீட்டு குப்பைத் தொட்டியில் போடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
மீதமான சாதம் இருந்தா போதுமே! 2 நிமிஷத்துல பஞ்சு போல் இட்லி செஞ்சிடலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Roja chedi tips Tamil. Roja chedi vaipathu eppadi. rose plant fertilizer at home. rose plant uram

- Advertisement -