நீங்க வேணாம்னு தூக்கி போட்ற இந்த 4 பொருள் போதும்! உங்கள் வீட்டில் மொட்டுக்கள் விடாத ரோஜா செடியில் கொத்து கொத்தா ரோஜாப்பூ ஆரோக்கியமா வளர வைக்கலாம்.

rose-beetroot-peel
- Advertisement -

ரோஜா பூ வாங்கி வைத்துவிட்டு அதில் மொட்டுக்கள் விடாமல் அப்படியே இருக்கும். நாம் ஒரு ரோஜா தொட்டியை வாங்குகிறோம் என்றால் வாங்கும்பொழுது அதில் இருக்கும் பூக்கள் மலர்ந்து, ஒருமுறை அதனை பறித்து விட்டால் அதன்பிறகு வளர்வதே இல்லை. இதற்கு காரணம் நாம் அதனை சரியாக பராமரிப்பது இல்லை. ரோஜா செடியை பொருத்தவரை சரியான பராமரிப்பு இல்லை என்றால் பூக்கள் பூக்காது. மொட்டுக்களும் விடாது. அதற்கு தேவையான சத்துக்களை நாம் கொடுத்துவிட்டால் போதும். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கொத்துக்கொத்தாக பூக்கள் மலர ஆரம்பித்துவிடும். ரோஜா செடிக்கு தேவையான சத்துக்கள் என்ன? ரோஜா செடியை எப்படி சுலபமாக பூக்களை பூக்க வைப்பது? என்பதை இப்பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

rose

ரோஜா செடிகள் பராமரிப்புக்கு நாம் பெரிதாக ஒன்றும் செலவழிக்கத் தேவையில்லை. உங்கள் வீட்டில் நீங்கள் வேண்டாம் என்று குப்பையில் தூக்கி எரியும் இந்த சில பொருட்களை வைத்தே அதற்கு சத்து டானிக் தயாரித்து விடலாம். எந்தெந்த பொருட்களை நாம் இப்போது பயன்படுத்த இருக்கிறோம்? முதலில் அரிசி கழுவிய தண்ணீர் தேவை. நாம் அரிசியை கழுவும் பொழுது அந்தத் தண்ணீரை வீணாக சிங்கிள் ஊற்றுகிறோம். அந்த தண்ணீரில் செடிகள் செழித்து வளர்வதற்கு தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கியுள்ளன.

- Advertisement -

நீங்கள் அரிசி கழுவிய தண்ணீர் கீழே ஊற்றுவதற்கு பதிலாக செடிகளுக்கு ஊற்றி விடுங்கள். இப்போது அரிசி கழுவிய தண்ணீரை 1 லிட்டர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 3 பொருட்களை சேர்த்து ஊறவைத்து சுலபமாக சத்து டானிக் செய்துவிடலாம். நீங்கள் பீட்ரூட் உபயோகிக்கும் பொழுது அதன் தோல் பகுதிகளை வீணாக தூக்கி எரிவதற்கு பதிலாக அரிசி கழுவிய நீரில் போட்டுக் கொள்ளுங்கள். அதேபோல் வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு தோலை மட்டும் இதில் சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் உரிக்கும் பொழுது தூக்கி எரியும் தோலையும் அதில் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பீட்ரூட் தோல், வாழைப்பழத் தோல், வெங்காய தோல் இந்த மூன்று பொருட்களையும் அரிசி கழுவிய நீரில் ஊற வைக்க வேண்டும்.

அதை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே நான்கு நாட்கள் வரை வைத்திருங்கள். இதை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் புழுக்கள், கொசுக்கள் வந்துவிடும். நான்கு நாட்களுமே தினமும் மூன்று வேளைகளில் பாட்டிலை இரண்டு மூன்று முறை நன்றாக குலுக்கி குலுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அதில் இருக்கும் சாறுகள் மொத்தமாக நீரில் கலக்கும்.

- Advertisement -

நான்கு நாட்களுக்கு பிறகு நன்றாக குலுக்கி விட்டு வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த டானிக் ஒரு லிட்டர் நீங்கள் எடுத்துக் கொண்டால் அதில் ஐந்து லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளலாம். தண்ணீர் ஊற்றவில்லை என்றாலும் நேரடியாக இந்த சாற்றை ஒரு கால் டம்ளர் அளவிற்கு ஒரு செடிக்கு வேர்ப்பகுதியில் சுற்றிலும் ஊற்றி வரலாம். அதன்பிறகு நீங்கள் எப்போதும்போல் நீரூற்றி கொள்ளுங்கள்.

rose-plant-watering

அரிசி கழுவிய தண்ணீரில் இருக்கும் நைட்ரஜன் செடி வளர்ச்சிக்கும் நோய் தாக்காமல் இருப்பதற்கும் பயன்படுகிறது. வெங்காயத் தோலில் கால்சியம், அயர்ன், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் பல சத்துக்கள் இருப்பதால் மொட்டுக்கள் உதிராமல் பாதுகாக்கும், பெரிய பெரிய பூக்கள் மலரவும் உதவி செய்யும். வாழைப்பழத் தோலில் கால்சியம், பொட்டாசியம், சல்ஃபர், பாஸ்பேட் போன்றவை இருப்பதால் ஊட்டசத்து கிடைக்கும். பீட்ரூட் தோலில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின், வைட்டமின் பி, சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால் செடிகளுக்கு உண்டாகும் அத்துணை பாதிப்புகளையும் அகற்றி செழித்து வளர உதவும். அடிக்கடி இதை செய்து வைத்து ஊற்றி வாருங்கள். ரொம்பவே சுலபமான வழிமுறைதான். நீங்களும் செய்து பயனடையுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
5 பைசா செலவே இல்லாம வீட்டிலேயே உரம் செஞ்சி இப்படி போடுங்க, உங்க செடிகள் எல்லாத்திலும் பெரிசுபெரிசா பசுமையா பூக்கள் பூக்கும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rose plant growth tips in Tamil. Rose plant fertilizer at home. Rose plant uram. Rose plant tonic. Rose plant growth in Tamil.

- Advertisement -