அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே ரோஸ் மில்க்கை ஒரு முறை இப்படி போட்டு குடிச்சு பாருங்க! இந்த ரோஸ்மில்க் சுவைக்கு உங்கள் நாக்கு அடிமையாகி விடும்.

rose-milk

வெயில் காலம் வந்து விட்டது. நம்முடைய வீட்டிலேயே குளிர் பானங்களைத் தயாரித்து குளிப்பது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். அந்த வரிசையில் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒரு குளிர்பானம் தான் இந்த ரோஸ் மில்க். பாலை காய்ச்சி, சர்க்கரையை போட்டு, ரோஸ் எசன்ஸ் ஊற்றி கலக்கினோம் என்று இல்லாமல், இதற்க்கென்று ஒரு பக்குவம் உள்ளது. முறையாக இதுமாதிரி ரோஸ் மில்கை ஒருமுறை போட்டு பாருங்கள். இதனுடைய சுவைக்கு நீங்கள் அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு சுவைமிகுந்த ரோஸ் மில்க் எப்படி போடுவது? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

milk1

இதற்கு தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். பால் – 1 லிட்டர், சர்க்கரை 3 லிருந்து 4 டேபிள் ஸ்பூன், ரோஸ் எசன்ஸ் – 2 ஸ்பூன், ஐஸ் க்யூப்ஸ் தேவையான அளவு.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி, அந்தப் பாலை 3/4 லிட்டர் அளவு வரும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும். ஒரு கரண்டியை வைத்து இந்தப் பாலை கலக்கிக் கொண்டே, காய்ச்சுங்கள். பால் அடி பிடித்து விடக்கூடாது. திக்கான பாலை, தண்ணீர் சேர்க்காமல் காய்ச்ச வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

rose-milk1

காய்ந்த பாலை நன்றாக ஆற வைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய கடாயில் 3 ஸ்பூன் அளவு சர்க்கரையை போட்டு, 3 ஸ்பூன் அளவு தண்ணீரை விட்டு அந்த சர்க்கரையை நன்றாக கரைத்துக் கொள்ளவேண்டும். பாகு காய்ச்சி விடக்கூடாது. சர்க்கரை தண்ணீரில் நன்றாக கரைந்ததும், அந்த சர்க்கரை தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை கரைசல், ரோஸ் எஸன்ஸ், தேவையான அளவு ஐஸ் கட்டிகளை மிக்ஸி ஜாரில் போட்டு, மிக்ஸியில் ஒரு நிமிடம் நன்றாக ஓட விடுங்கள். அதன் பின்பு கண்ணாடி டம்ளரில் பரிமாறி உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து பாருங்கள்.

rose-milk2

பாலை திக்காக காய்ச்சி விட்டு அதில் ஐஸ் கியூபை போட்டு அரைக்கும் போது, பால் தண்ணீர் பதத்திற்கு வந்துவிடும். தேவைப்பட்டால் 1 லிட்டர் பாலை, 1/2 லிட்டர் பாலாக சுண்ட காய்ச்சியும் கூட, அதில் ரோஸ்மில்க் போட்டால் அதன் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். உங்களுக்கு எந்த அளவிற்கு ரோஸ்மில்க் திக்காக வேண்டுமோ, அந்த அளவிற்கு பாலை சுண்ட காய்ச்சிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இஷ்டம்தான்.

rose-milk3

மிகவும் அருமையான சுவையில் அமிர்தம் போல ரோஸ்மில்க் தயார்! ரோஸ் மில்க் போடும் பக்குவம் இதுதான். ‌இப்படி ரோஸ்மில்கை போட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயமாக விரும்பி குடிப்பார்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நாளைக்கே உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்களேன். திரும்பத் திரும்ப இதே மாதிரி போட்டுக்கிட்டே இருப்பீங்க.