பௌர்ணமி நிலவு போல் பிரகாசமாகவும் அதேசமயம் இளமையுடனும் அழகாகவும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்றுதான் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இதற்கு ஆண்களும் விதிவிலக்கல்ல. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரே ஒரு பொருள் நம்மிடம் இருந்தால் அனைத்து விதமான முகப்பிரச்சனையையும் தீர்க்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் ரோஜா இதழ்களை வைத்து முகத்தை எந்த அளவிற்கு அழகாக்க முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
அழகான மலர்கள் வரிசையில் ரோஜா பூவிற்கு முதலிடம் வகிக்கப்படுகிறது. அதனால் தான் காதலை வெளிப்படுத்த ரோஜா மலர்களை உபயோகப்படுத்துகிறார்கள். அது மட்டுமல்லாமல் ரோஜா மலருக்கு பல மருத்துவ குணங்களும் இருக்கின்றன. உணவாக உட்கொள்ளும் பொழுது உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் புதிதாக ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ரோஜா இதழ்களை நாம் அழகுக்காக எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
இந்த ஃபேஸ் பேக்கை நாம் தயார் செய்வதற்கு பன்னீர் ரோஜாக்களை தேர்வு செய்ய வேண்டும் அல்லது நாட்டு ரோஜாக்களை தேர்வு செய்யலாம். இந்த ரோஜாவை நாம் இரண்டு வகைகளில் பயன்படுத்தலாம். ஒன்று அதன் இதழ்களை உதிர்த்து நன்றாக காய வைத்து அதை பொடி செய்து வைத்துக் கொண்டும் உபயோகப்படுத்தலாம். அல்லது பச்சையாக இருக்கும் பொழுதே அதை அரைத்தும் உபயோகப்படுத்தலாம். பல நேரங்களில் ரோஜா பூ கிடைக்காது என்பதால் ரோஜா இதழ்களின் பொடியை வைத்து எப்படி உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.
இதற்கு முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு ரோஜா இதழ் பொடியை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான சந்தனத்தை சேர்க்க வேண்டும். அடுத்ததாக ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து சிறிது பன்னீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு ஆக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பேஸ்டை முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே உலர விட்டு கழுவ வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். பருக்கள் தேமல்கள் இருந்தால் அதுவும் சரியாகிவிடும். ஓபன் போர்ஸ் என்று சொல்லக்கூடிய முக துவாரங்கள் சரியாகும். முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கும் என்று இதன் பலன்களை நாம் அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த பேக்கை வாரத்திற்கு மூன்று முறை அல்லது நான்கு முறை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரங்கள் நாம் உபயோகப்படுத்தினாலேயே நம்மால் கண்கூடாக நம்முடைய முகத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தை உணர முடியும்.
இதையும் படிக்கலாமே: உடனடி பிரகாசத்தை தரக்கூடிய ஃபேஸ் பேக்.
எளிமையான முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி நம்முடைய அழகை மேலும் மேன்மையாக்கி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.