ரோஜா போன்ற பூச்செடிகள் அடிக்கும் வெயிலில் வாடி விடுகிறதா? வீட்டில் இருக்கும் இந்த பொருளை ஊற வைத்து தெளியுங்கள்!

cucumber-peel-rose-plant

இப்பொழுது கோடை காலம் துவங்கி விட்டது. வீட்டில் இருக்கும் தாவரங்கள் மற்றும் செடி, கொடி வகைகள் அதிகமாக வாடத் துவங்கிவிடும். இதற்கு தேவையான சத்துக்களும், புத்துணர்ச்சி பெறக்கூடிய வகையில் தண்ணீரும் அடிக்கடி கொடுத்து வர வேண்டும். இவ்வளவு நாள் பராமரிப்பு இல்லாமல் கூட அவைகள் வளர்ந்து வந்திருக்கலாம். ஆனால் வெயில் காலம் துவங்கி விட்டால் அதற்குரிய பராமரிப்பில் இருக்க வேண்டும். இல்லையென்றால் செடியில் இலைகள் வாடத் துவங்கி செடி பட்டுபோக வாய்ப்புகள் உள்ளது. இதற்கு நம் வீட்டில் இருக்கும் இந்த சில பொருட்கள் போதுமானது! அப்படியான பொருட்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்!

rose2

அதிகப் பராமரிப்பு இல்லாத செடிகள் கூட கோடை காலத்தில் வாடி, வதங்கி விடும். அடிக்கடி தண்ணீர் தெளித்து வருவதும், ஈரப்பதத்துடன் பாதுகாப்பது முக்கியம் ஆகும். குறிப்பாக அதற்கு தேவையான ஊட்டச்சத்து கொடுத்து வந்தால் வறட்சியின்றி பசுமையாக வளரும். இதற்கு அதிகமாக விலை கொடுத்து எதையும் வெளியில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டில் இருக்கும் இந்த சில பொருட்கள் வறட்சியில் இருந்து செடிகளை பாதுகாத்து வைக்கும்.

நீங்கள் சமைக்கும் பொழுது அதில் உருளைக்கிழங்கு, வாழைக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை நறுக்கும் பொழுது அதன் தோல்களை தூக்கி எறிந்து விடாதீர்கள். பத்திரமாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அது போல் தேங்காய் உடைக்கும் பொழுது அதனுடைய தண்ணீரை வீணாக்கி விடாதீர்கள். தேங்காய் தண்ணீர் செடி கொடிகள் ஈரப்பதம் தக்க வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

coconut-water

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஒரு லிட்டர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள், அதில் நீங்கள் சேகரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு தோல், வாழைக்காய் தோல், அல்லது வெள்ளரிக்காய் தோல் எதுவாக இருந்தாலும் அதை அந்த தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். இவற்றில் ஒன்று இருந்தாலும் போதும். குறிப்பாக குளிர்ச்சி அளிக்கும் வெள்ளரிக்காய் தோல் பயன்படுத்துவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

இதனுடன் எடுத்து வைத்துள்ள தேங்காய் தண்ணீரையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் தண்ணீரில் இருக்கும் சத்துக்கள் செடி, கொடிகளின் ஊட்டசத்து மிகுந்த பயனுள்ளவை என்பதால் இதனை கட்டாயம் சேர்ப்பது நல்லது. தேங்காய் தண்ணீர், வெள்ளரிக்காய் அல்லது மற்ற காய்கறிகளின், தோல், சாதாரண தண்ணீர் இவற்றை மூன்று நாட்கள் வரை அப்படியே மூடி வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் திறந்து பார்க்கும் பொழுது அதிலிருந்து நல்ல ஒரு பழ வாசம் வீசும்.

cucumber-peel

மூன்றும் கலந்த இக்கலவை நொதித்த பிறகு 4 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். இதனை செடி, கொடிகளுக்கு உரமாக ஸ்பிரே செய்து கொள்ளலாம். இதற்கு இவற்றை நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை இக்கலவையை உங்களுடைய செடி, கொடிகளுக்கு, குறிப்பாக ரோஜா செடிக்கு ஸ்ப்ரே செய்து கொண்டால் போதும்! பூக்காத பட்டு செடியும் பூக்கத் துவங்கும். மேலும் கோடை காலத்தில் இருந்து செடிகள் வறட்சியடையாமல் பசுமையாக வளர செய்யும். வெள்ளரிக்காய் மற்றும் தேங்காய் தண்ணீர் சேர்த்த கலவை மண்ணிற்கு குளிர்ச்சியையும், செடிகளுக்கு வளர்ச்சியையும் கொடுக்கும் என்பதால் நீங்களும் முயற்சி செய்து பயனடையலாமே!