சிறிய ரோஜா செடியில் கூட, நிறைய மொட்டுக்கள் வைத்து நிறைய பூக்கள் பூக்க, இந்த ஒரு உரமே போதும்.

rose

சிறியதாக இருக்கும் ரோஜா செடியாக இருந்தாலும், அதில் நிறைய மொட்டுக்கள் வைத்து கொத்துக்கொத்தாக பூக்கள் பூத்து இருந்தால் தான் அழகு. அந்த அழகை உங்கள் வீட்டு ரோஜா செடிகளிலும் காண வேண்டுமா. கொஞ்சம் சிரமப்படாமல் இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை தயார்செய்து மாதத்தில் இரண்டு நாட்கள், அந்த ரோஜா செடிகளுக்கு கொடுத்து வாருங்கள். நிச்சயமாக பூக்காத ரோஜா செடிகள் கூட கூடிய சீக்கிரத்திலேயே செழிப்பாக வளர தொடங்கி கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் வைத்து பூக்களை பூக்கும். அந்த பூக்களும் நன்கு பெரிய அளவில் பூக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

Roja chedi

நீங்கள் எந்த பழவகைகளை சாப்பிட்டாலும் அந்தத் தோலை தூக்கி குப்பையில் போடாதீர்கள். அந்த பழத்தோலை நிழலிலேயே உலர வைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு டீ போடும் திப்பியை தூக்கி போடாமல் அதையும் உலர வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து அதில் 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் பழ தோல்கள், டீ தூள் 2 டேபிள் ஸ்பூன், காப்பித்தூள் 1 டேபிள்ஸ்பூன், அதன் பின்பு புளித்த தயிர் 1/2 கப், இட்லி மாவில் இருந்து ஒரு 2 டேபிள்ஸ்பூன் மாவு இருந்தால் இதில் ஊற்றிக் கொள்ளலாம். புளித்த மாவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த பொருட்கள் எல்லாவற்றையும் அரை லிட்டர் தண்ணீரில் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

froot4

இந்தக் கலவையோடு உங்களுடைய வீட்டில் காய்கறிகளுடைய கழிவு மீதமாகது ஏதேனும் இருந்தாலும் அதையும் சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை. பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள தண்ணீரில் எல்லாப் பொருட்களையும் சேர்த்து விட்டீர்கள்.

- Advertisement -

இந்த பிளாஸ்டிக் டப்பாவை காற்று புகாமல் ஒரு மூடி போட்டு உங்களுடைய வீட்டில் நிழலாக ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். இரண்டு நாட்கள் கழித்து இந்த பாட்டிலை திறந்தால் இதற்கு உள்ளே நுண்ணுயிர் சத்து அதிகமாக உருவாகி இருக்கும். அந்த தண்ணீரிலும் நுண்ணுயிர் சத்து நிறைந்து இருக்கும்.

rose-plant-watering

ஒரு பெரிய பட்கெட்டில் 5 லிட்டர் அளவு நல்ல தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள். அந்த நல்ல தண்ணீரோடு, பிளாஸ்டிக் பாட்டிலில் நுண்ணுயிர் சத்து நிறைந்த தண்ணீரை ஊற்றி ஒரு குச்சியை வைத்து நன்றாக கலந்து இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை உங்களுடைய ரோஜா செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.

rose

சூரிய உதயத்திற்கு முன்பாக இந்த தண்ணீரை செடிகளுக்கு கொடுத்துவிடுங்கள். அப்படி இல்லை என்றால் சூரிய அஸ்தமனம் ஆன பின்பு 5.30 மணிக்கு மேல் இந்த தண்ணீரை செடிகளுக்கு கொடுக்க வேண்டும். மாதத்தில் இரண்டு நாட்கள், ஒரு செடிக்கு ஒரு லிட்டர் அளவு இந்த தண்ணீர் போதுமானது. வாடிய செடிகளாக இருந்தாலும், வளராத செடிகளாக இருந்தாலும் சீக்கிரமே வளர்வதை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும். முயற்சி செய்து பாருங்கள்.