அதிக ரன்கள் குவித்த நியூசி வீரர் பிளமிங்கை முந்திய நியூசி அதிரடி வீரர். ஆனால், இதுதான் உங்கள் அணி வீரரின் அதிகபட்ச ரன்களா ? ரசிகர்கள் கலாய்ப்பு

williamson

நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது வங்கதேச அணி. அனால், அவர்களின் இந்த முடிவு சோதனையில் முடிந்தது.

ross taylor

ஆம் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 330 ரன்களை குவித்தது. இதனால் 331ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கினை நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 242 ரன்கள் மட்டுமே குவித்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் 82 பந்துகளை சந்தித்த ராஸ் டெய்லர் 69 ரன்களை குவித்தார். இதன்மூலம் அதிக ரன்கள் நியூசிலாந்து அணிக்காக குவித்த பிளமிங்கை (8007) முந்தி 8026 ரன்களுடன் தற்போது ராஸ் டெய்லர் முதலிடத்தில் உள்ளார்.

இந்த சாதனையை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ரன்கள் தான் உங்கள் அணியின் அதிகபட்ச ரன்களா என்று நகைச்சுவையாக கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

அடித்தது முதல் சதம் இதற்கே விராட் கோலி போன்று அலப்பறையான கொண்டாட்டமா ? வங்கதேச வீரரை வறுத்தெடுத்த இந்திய ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்