பொருளாதார தடைகள் நீங்கி, சுக்கிர யோகம் பெற்று ஊரே வியக்கும் படியாக வாழ சிறப்பான ஒரு மந்திரம் இதோ.

sukkiran
- Advertisement -

வாழ்க்கை என்பது ஒரு முறை மட்டுமே வாழ்ந்து பார்க்கின்ற ஒரு அனுபவமாகும். ஆனால் இந்த மனித வாழ்க்கை என்பது அனைவருக்குமே சுகமானதாக இருப்பதில்லை. பெரும்பாலான மனிதர்களுக்கு தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்ல போதிய அளவு செல்வம் இருப்பதில்லை. இதனாலேயே பலருக்கும் மனக்கவலை அதிகரித்து, ஊக்கத்துடன் செயல்பட முடியாமல் போகிறது. இத்தகைய துன்பங்கள் அனைத்தையும் போக்கி, வேண்டிய அளவு செல்வத்தையும், இன்னபிற இன்பங்களையும் அருளும் ருரு பைரவர் காயத்ரி மந்திரம் இதோ.

நவகிரகங்களில் குரு கிரகத்திற்கு அடுத்து சுப கிரகமாக விளங்குபவர் சுக்கிரன் ஆவார். “சுக்ர” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு “இனிமை” என்பது பொருள். பெயருக்கேற்றார் போல தன்னை வழிபடும் மனிதர்களுக்கு இன்பங்களை வாரி வழங்குவதில் வள்ளலாக திகழ்பவர் சுக்கிர பகவான். இன்றைய சுக்கிர கிரகத்தின் பிராண தெய்வமாக இருப்பவர் 64 பைரவர்களில் ஒருவரான ருரு பைரவர். இத்தகைய ருரு பைரவரின் மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் மூலம் அவரின் பரிபூரண அருளை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

ருரு பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்

இந்த ருரு பைரவ காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும், பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி நின்ற வாறு 9, 18, 27 அல்லது 108 முறை என ஒன்பது மடங்கு எண்ணிக்கையில் துதித்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்பவர்களுக்கு ருரு பைரவர் அருள் கிடைத்து அவர்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கின்ற பல இன்னல்கள் நீங்கும். பொருளாதார நிலை மேம்படும் இல்வாழ்வில் இருக்கின்ற சிக்கல்கள் தீரும்.

- Advertisement -

ருரு பைரவர் எனப்படுபவர் சிவபெருமானின் அஷ்ட பைரவ மூர்த்தி தோற்றங்களில் இரண்டாவது பைரவர் ஆவார். இந்த ருரு பைரவர் சிவபெருமானைப் போன்றே ரிஷபம் எனப்படும் எருதினை வாகனமாகக் கொண்டவர். இந்த பைரவர் காசி மாநகரில் இருக்கின்ற காமாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சப்த கன்னிகளில் ஒருவராக இருக்கின்ற காமாட்சி இந்த பைரவருக்குரிய சக்தியின் வடிவாக இருக்கிறார். நவக்கிரகங்களில் சுக்கிரன் கிரகத்திற்குரிய தோஷங்கள் நீங்க இந்த பைரவரை வழிபடலாம்.

சுக்கிரன் சாதகமாக இருப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம், வாழ்வில் அடுத்தடுத்த கட்டங்களை எளிதில் எட்டுவதோடு ஊர் போற்றும் அளவிற்கும் அனைத்துவிதமான செல்வங்களையும் சேர்க்க வழி கிடைக்கும்..

- Advertisement -