மன குழப்பத்தை போக்கி மன தெளிவு தரும் முத்திரை

முத்திரை

இன்று பரபரப்பான காலகட்டத்தில் கடினமான பணிகளில் பலரும் ஈடுபடுவதால் அவர்களுக்கு உடல் அசதியும், மனச்சோர்வும் ஏற்படுகிறது. இந்த இரண்டு குறைகளையும் நீக்குவதற்கான முத்திரை தான் இந்த “ருத்ர முத்திரை” இதை பயிற்சி செய்யும் முறையை இங்கு காண்போம்.

Thiyanam

முத்திரை செய்யும் முறை:
முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும்.

இப்போது உங்கள் இரு கைகளிலுள்ள ஆட்காட்டி மற்றும் மோதிர விரல்களை உங்கள் கட்டைவிரல்களோடு கீழே உள்ள படத்தில் காட்டியது போல் வைத்துக்கொள்ளவேண்டும்.

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த முத்திரையை 15 முதல் 20 நிமிடங்கள் காலையிலும், மாலையிலும் பயிற்சி செய்ய வேண்டும்.

- Advertisement -

பலன்கள்:

இம்முத்திரையை தொடர்ந்து பயிற்சி செய்வதால் உடலில் அதிகப்படியான சக்தி ஏற்படும், அசதி நீங்கும். மனக்குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெரும். உடலின் செரிமாணத்திறன் மேம்படும். படபடப்புத் தன்மை நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
பித்தவெடிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

இது போன்ற மேலும் பல யோக முத்திரைகள், சித்தர் மருத்துவ குறிப்புகள் மற்றும் சித்தர்கள் சார்ந்த பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.