தோசை மாவு இல்லாத சமயத்தில் இனி கவலையே வேண்டாம். 10 நிமிடத்தில் இப்படி கூட மொறுமொறு தோசை செய்யலாமே.

dosai
- Advertisement -

பெரும்பாலும் இப்போதெல்லாம் நம்முடைய வீடுகளில் காலை இரவு என்றால் இட்லி தோசை மாவு இல்லாமல் டிபன் வேலை நடப்பதே கிடையாது. இரண்டு இட்லி, இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள ஏதோ ஒரு சட்டினி. இப்படித்தான் சமையல் வேலை ஆகிறது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக ஜவ்வரிசியை வைத்து உடனடியாக மொறு மொறு தோசை மாவு தயார் செய்வது எப்படி என்பதை பற்றிய குறிப்புதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குழந்தைகள் விருப்பமாக இதை சாப்பிடுவார்கள். அவ்வளவு மொறுமொறுப்பாக சுவையாக இருக்கும். இதில் உருளைக்கிழங்கு சேர்த்து செய்வதால், ஒரு காயும் சேர்த்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபி பார்க்கலாம்.

செய்முறை

முதலில் 1/2 கப் அளவு ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். மாவு ஜவ்வரிசி என்று கடையில் கேட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து, இந்த மாவு பச்சரிசியை அதில் போட்டு படபடவென பொரிந்து வரும் அளவிற்கு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசான பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஓரளவுக்கு மீடியம் சைஸில் இருக்கும் ஒரு பெரிய உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து தனியாக எடுத்து, இதையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அகலமான ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் பொடியாக அரைத்து வைத்த ஜவ்வரிசி மாவை போட்டுக் கொள்ளுங்கள். அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் இதோட ஊற்றிக் கொள்ளுங்கள். பச்சரிசி மாவு 1/2 கப், அளவு இதோட போட்டுக் கொள்ளுங்கள். (1/2 கப் ஜவ்வரிசி எடுத்தால், 1/2 கப் பச்சரிசி மாவு என்பது கணக்கு).

- Advertisement -

அடுத்து தேவையான அளவு – உப்பு, சீரகம் – 1/2 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை கொத்தமல்லி தழை – பொடியாக நறுக்கியது சிறிதளவு, வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1 கைப்பிடி, அளவு போட்டு தண்ணீரை ஊற்றி இந்த மாவை கட்டி இல்லாமல் கரைக்கவும்.

இந்த மாவை ரவை தோசை போலத்தான் ஊற்றப் போகின்றோம். ஆகவே மாவு ரொம்பவும் திக்காக கரைக்க வேண்டாம். அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அது காய்ந்ததும் இந்த மாவை எடுத்து பரவலாக ரவா தோசை ஊற்றுவதுபோல ஊற்றிக் கொள்ளுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டால் தோசை சிவந்து மொறு மொறுப்பாக வந்துவிடும். திருப்பி போட வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல் சரவண பவன் ஸ்டைலில் பரோட்டா குருமா செய்ய இந்த இரண்டு பொருளை மட்டும் சேர்த்தா போதும். டேஸ்ட் அட்டகாசமா அப்படியே இருக்கும். இனி எப்ப குருமா செஞ்சாலும் இப்படித் தான் செய்வீங்க.

அப்படியே தோசையை எடுத்து தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் சுட சுட பரிமாறினால் சூப்பரான தோசை தயார். இன்ஸ்டன்ட் ஆக இவ்வளவு பொறுப்பாக, இவ்வளவு ஈசியாக யாராலும் தோசை சுட முடியாது. உங்க வீட்ல இட்லி தோசை மாவு இல்லாதப்ப கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் இதற்கு தொட்டுக்க எதுவுமே இல்லாமல் கூட அப்படியே விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -