சமையலறையில் இந்த பொருள் வறட்சி அடைந்து போனால், நம் வீடும் ஒரு சில நாட்களில் வறுமையில் வாடி போகும்.

lakshmi-rice-water
- Advertisement -

ஒரு வீட்டில் சமையல் அறையில் இந்த தவறு மட்டும் நடக்கவே கூடாது. அந்த காலத்தில் நம்முடைய பாட்டி அம்மா எல்லாம் இந்த ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பார்கள். ஆனால் இன்று அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் இந்த விஷயத்தை யாருமே சரியாக கவனிப்பது கிடையாது. சமையல் அறையில் அப்படி என்ன நாம் செய்யக்கூடிய தவறு இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா. இந்தத் தவறை இது நாள் வரை நீங்கள் செய்யாமல் இருந்தால் அது உங்கள் குடும்பத்திற்கு நல்லது. தெரியாமல் இந்த தவறை இதனால் வரை செய்திருந்தால் பரவாயில்லை. இனிவரும் காலங்களில் திருத்திக் கொள்வோம். சமையலறையில் செய்யக்கூடாத அந்த ஒரு தவறு என்ன தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம்முடைய வீட்டிற்கு மகாலட்சுமியின் அருள் ஆசி கிடைக்க வேண்டும் என்றால், அன்னபூரணியின் அருள் ஆசியும் முழுமையாக நிறைவாக பெறப்பட வேண்டும். காசு காசு என்று நாம் காசை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோமே தவிர, சமையலறையை சரியாக கவனிப்பது கிடையாது. இவ்வளவு காசு எதற்காக சம்பாதிக்கின்றோம். ஒரு ஜான் வயிற்றுக்காக தான். அந்த ஒரு ஜான் வயிறு நிரம்புவது எதனால். ஒரு கைப்பிடி சாதத்தினால் தான். அன்னபூரணி என்ற ஒரு தெய்வத்தை மறந்தே போய் விட்டோம். நம் வீட்டில் இருக்கும் அரிசி தான் அன்னபூரணி.

- Advertisement -

அடுப்பில் உலையை வைத்து விட்டு அது கொதித்ததும் சாதத்தை போட்டு பொங்கி வரும் போது ஒரு கரண்டியை வைத்து சாதத்தை கலந்து விட்டு, பக்குவமாக சாதத்தை வடிக்க வேண்டும். ஏதோ சாதம் வடிக்க வேண்டுமே என்று அரிசியை போட்டுவிட்டு அது பொங்கி, அடுப்பில் சாதம் விழுவதை கூட கவனிக்காமல் ஒருபோதும் விடவே கூடாது. சாத பருக்கை நெருப்பில் பட்டு கருகிப் போகக் கூடாது. இது வீட்டிற்கு நல்லது அல்ல.

சாதத்தை வடித்த பின்பு ஐந்திலிருந்து ஏழு நிமிடத்திற்குள் திரும்பவும் நிமித்திவிட வேண்டும். சாதத்தை வடித்த பின்பு நம்முடைய அம்மா அந்த சாதத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வார்கள் பார்த்திருக்கிறீர்களா. அதற்கு என்ன அர்த்தம். இன்றைக்கு சாதம் வடித்தது போல, தினமும் எங்களுடைய வீட்டில் சாப்பாட்டுக்கு பஞ்சம் இல்லாமல், சாப்பாடு பொங்க வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொள்ள வேண்டும். வடித்த சாதத்தை நிமித்தி வைத்த பின்பு உடனடியாக தட்டிற்கு மேல் இருக்கும் சாத பருக்கைகளை எடுத்து சாதத்தோடு ஒன்றாக கலந்து விட வேண்டும். சாப்பாட்டு பானையில் ஒரு பருக்கை சாதம் கூட வறண்டு போய் விடக்கூடாது. மொத்தமாக சாப்பாடு இருந்தால்தான் அது வறண்டு போகாமல் இருக்கும். தனித்தனியாக தட்டில் ஒட்டி இருக்கும் சாதம் ஒரு சில மணி நேரத்திற்கு பின்பு வறண்டு, மீண்டும் அரிசி போலவே மாறிவிடும்.

- Advertisement -

ஒரு வேலை அரிசி போல மாறிய அந்த சாதத்தை சாப்பாடோடு சேர்த்து சாப்பிடும்போது இந்த சாதம் நம் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டால் அது ஆபத்து என்பதற்காக கூட இதை நம் முன்னோர்கள் சாஸ்திரமாக பின்பற்றி இருக்கலாம். எதுவாக இருக்கட்டும். அது நம்முடைய நன்மைக்காகத்தான் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே பெண்கள் சாப்பாட்டுப் பானையை வறண்டு போகும் அளவிற்கு காய விடாதீங்க.

சாதம் தீர்ந்து விட்டால் உடனடியாக அந்தப் அரிசி வடித்த குண்டானை சிங்கிள் போட்டு தண்ணீர் மட்டுமாவது ஊற்றி வைக்க வேண்டும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு சாப்பாட்டு குண்டானில் இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இருக்க வேண்டும். இரவு முழுவதும் சாதம் அப்படியே வறண்டு போய் காயவே கூடாது. ஒரு வீட்டில் சாதம் இப்படி வறண்டு போக போக, அந்த வீடும் வறுமை நிலைக்கு தான் தள்ளப்படும். இது நிதர்சனமான உண்மை.

நீங்கள் குக்கரில் சாதம் வடித்தாலும் சரி, அதை உடனடியாக ஹாட் பேக்கில் மாற்றிக் கொள்ளலாம். தவிர குக்கரில் சாதத்தை வறண்டு போக விடாதீர்கள். வடித்த சாதத்தை குக்கரில் இருந்து மாற்றியவுடன் சிங்கிள் போட்ட குக்கரில் உடனடியாக தண்ணீரை ஊற்ற வேண்டும். அந்த சாப்பாடு வடித்த பாத்திரம் எப்போதும் காய்ந்து போய் வீட்டில் இருக்கவே கூடாது. வீட்டில் சாப்பாட்டை காய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் பெண்களுடைய கடமை தான். எந்தப் பெண் தன்னுடைய வீட்டில் சாப்பாட்டுப் பானையை, வறட்சித் தன்மை இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வறுமையும் வராது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொடுப்போம்.

- Advertisement -