சதுரகிரி மலை தீர்த்தம் மகிமை

Sathuragiri malai theertham

பொதுவாகவே மலைகள் என்றாலும், மலைகளில் இருந்து கொட்டும் அருவி என்றாலும், அதற்கு உண்டான சிறப்புகள் அதிகம்தான். ஏனென்றால் மலையில் இருந்து நாம் பெறப்படும் நீரானது பசுமையான மூலிகைகளில் இருந்தும், அந்த மூலிகை மரத்தின் வேர்களில் இருந்தும் ஊற்றெடுக்கின்றது. இதனால் அந்த நீருக்கு இயற்கையாகவே மருத்துவ குணம் வந்து விடுகின்றது. இப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட மலைகளில் ஒன்றான சதுரகிரி மலையினை பற்றித்தான் இப்போது நாம் காணப் போகின்றோம். எந்திர கிரி, ஏம கிரி வருண கிரி, குபேர கிரி இந்த நான்கு மலைகளுக்கு நடுவே தான் சதுரகிரி மலை அமைந்துள்ளது.

சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம்  என்ற மலை உள்ளது. மலைகளில் இருந்து ஊற்றெடுக்கும் நீரானது தீர்த்தமாக கருதப்படுகிறது. இந்த தீர்த்தங்களில் நீராடினால் தீராத தோஷங்களும், நோய்களும் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையிலிருந்து “சந்திர தீர்த்தம்” உருவாகின்றது. இந்த தீர்த்தத்தில் ஒருமுறை இறைவனை வேண்டி, வணங்கி நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பாவங்களிலிருந்து விடுபடலாம்.

கௌண்டின்னிய தீர்த்தம்

இந்த தீர்த்தம் சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது. இது தெய்வீகத் தன்மை கொண்டது. ஏனென்றால் வறட்சி காலங்களில் முனிவர்களும், ரிஷிகளும், தேவர்களும் நீரினை பெறுவதற்காக ஈசனை வேண்டிக் கொண்டு யாகம் நடத்தினர். அப்பொழுது ஈசன் தன் சடை முடியில் உள்ள கங்கையில் இருந்து, ஒரு சொட்டு நீரினை சதுரகிரி மலையின் நடுவில் விட்டு விட்டு லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

- Advertisement -

Sathuragiri malai

இந்த தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, கோதாவரி, கோமதி, சிந்து, துங்கபத்திரா போன்ற நதிகளில் நீராடிய பயனை அடையலாம். இந்த நதிக்கு பாவத்தைப் போக்கும் சக்தியும் “பாவ கிரி” நதி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

சந்தன மகாலிங்க தீர்த்தம்

சதுரகிரிக்கு மேல் ஒரு “காளிவனம்” அதாவது இருண்ட வனம் உள்ளது. அந்த வனத்தில் இருந்து நாம் பெறப்படும் தீர்த்தத்தை சந்தன மகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கின்றோம். ஒருமுறை பார்வதி தேவியை, பிருங்கு முனிவர் வணங்காமல் சென்றதனால், பார்வதி தேவி கோபத்துடன் ஈசனை விட்டு பிரிந்து சென்றார்கள். ஈசனுடன் தானும் பாதியாக கலந்து அர்த்தநாரீஸ்வரராக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சதுரகிரி மலைக்கு வந்து, லிங்கப் பிரதிஷ்டை செய்து, அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காக ஆகாயதத்தின்  மார்க்கமாக கொண்டுவரப்பட்ட நீர்தான் சந்தன மகாலிங்க தீர்த்தம் ஆகும். இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நாம் செய்த பாவத்திற்கு விமோச்சனம் கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல், பார்வதிதேவியின் பணிப்பெண்களாக சப்த கன்னியர்கள் நீராடுவதற்காக “திருமஞ்சன பொய்கை” என்ற தீர்த்தமும் உள்ளது.

Sathuragiri malai

பிரம்ம தீர்த்தம்

இந்த பிரம்ம தீர்த்தம் காலங்கிநாதரரல் உருவாக்கப்பட்டது. கருப்பண்ணசுவாமி இதற்கு காவலாக இருகின்றார். இது மட்டும் அல்லாது கோரக்கர், ராமதேவர், போகர் போன்ற சில ரிஷிகள், “பொய்கை தீர்த்தம்”,  “பசுக்கிடைத் தீர்த்தம்”, “குளிராட்டி தீர்த்தம்” போன்ற தீர்த்தங்களை சதுரகிரி மலையில் உருவாக்கி உள்ளனர். இதில் குளிராட்டி தீர்த்தத்தில் மட்டும் நீர்வரத்து குறையாது. இதில் குளித்தால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இன்னும் நம் கண்ணுக்குத் தெரியாமல் மகரிஷிகளும் சித்தர்களும் சதுரகிரி மலையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த தீர்த்தங்களில் நம் நீராடுவதம் மூலம் நமக்கு அந்த சிவபெருமானின் ஆசியுடன், சித்தர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
ஏற்றிய விளக்கை குளிரவைக்க சரியான முறை என்ன?

English Overview:
Here we have Sathuragiri hills miracles in Tamil.